»   »  பொய் சொல்ல வைத்துவிட்டார்கள்: முதல்முறையாக திலீப்புக்கு எதிராக பேசிய நடிகை மஞ்சு

பொய் சொல்ல வைத்துவிட்டார்கள்: முதல்முறையாக திலீப்புக்கு எதிராக பேசிய நடிகை மஞ்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: என் மகளை பொய் சொல்ல வைத்துவிட்டார்கள் என நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

நடிகை மஞ்சு வாரியரும், நடிகர் திலீப்பும் காதலித்து திருமணம் செய்தனர். அவர்களுக்கு மீனாட்சி(16) என்ற மகள் உள்ளார். மஞ்சுவை பிரிந்த திலீப் நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார்.

மஞ்சு, திலீப் பிரிய காவ்யா தான் காரணம் என்று கூறப்பட்டது.

மஞ்சு

மஞ்சு

திலீப்பை பிரிந்த பிறகு மஞ்சு அவருக்கு எதிராக இந்நாள் வரையிலும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். ஃபேஸ்புக் போஸ்ட்டுகளில் கூட திலீப்புக்கு மரியாதை அளித்து வந்தார்.

முதல்முறையாக

முதல்முறையாக

மஞ்சு தற்போது முதல்முறையாக திலீப்புக்கு எதிராக பேசியுள்ளார். திலீப் காவ்யாவை திருமணம் செய்ய எங்கள் மகள் மீனாட்சி கட்டாயப்படுத்தியகாக கூறுவதில் உண்மை இல்லை என்று மஞ்சு சந்திரிகா என்கிற மலையாள பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

பொய்

பொய்

திலீப்பும், கவ்யாவும் திருமணம் செய்ய எங்கள் மகளையே பொய் சொல்ல வைத்துவிட்டார்கள். திலீப் எப்பொழுது நடிக்கிறார் என்றே தெரியவில்லை என மஞ்சு தெரிவித்துள்ளார்.

காவ்யா

காவ்யா

திலீப்புக்கும், காவ்யாவுக்கும் தொடர்பு இருந்தது மஞ்சுவுக்கு ஏற்கனவே தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் காவ்யாவை விட்டுவிடுமாறு திலீப்பை கெஞ்சியதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

English summary
Actress Manju Warrier said that Dileep and his family have made her daughter lying about his second wedding.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil