»   »  மீண்டும் மன்மத ராணி

மீண்டும் மன்மத ராணி

Subscribe to Oneindia Tamil
Chaya Singh
திருடா திருடி படத்தில் தனுஷூடன் ஜோடி சேர்ந்து மன்மத ராசா.. ஆட்டம் போட்டதோடு காணாமல் போன பெங்களூரைச் சேர்ந்த சாயா சிங் மீண்டும் கோலிவுட்டுக்கு வருகிறார்.

திருடா திருடி வெற்றிப் படம் என்றாலும் சாயாவுக்கு பெரிய அளவில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வரவில்லை. எல்லா நடிகைகளை போல் இவரையும் குத்தாட்டத்திற்கு அழைத்தனர்.

விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அந்த ஆட்டத்தை தொடர்ந்து குத்தாட்ட வாய்ப்புகளாகவே வரவே கையெடுத்து கும்பிட்டு ஓடிவிட்டார்.

ஒரு வழியாக விவேக்குடன் சொல்லி அடிப்பேன் படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. விவேக்குக்கு ஜோடியா என்று முதலில் மிரண்டாலும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார்.

ஆனால் அவருடைய ராசியோ என்னமோ, படம் முடிந்து பல காலமாகியும் இன்னும் திரைக்கு வரவில்லை. வருமா என்றும் தெரியவில்லை.

அதே கதை தான் இவர் நடித்த இன்னொரு படமான லெமன் படத்துக்கும் நேர்ந்தது. அதுவும் வெளியில் வரவில்லை.

ஆக ஹீரோயினாக இவர் நடித்து வந்த கடைசி படம் திருடா திருடி தான்.

இதையடுத்து சாயாசிங் தெலுங்கு மற்றும் போஜ்பூரி படங்களில் நடித்து வந்தார். தெலுங்கிலும் செகண்ட் ஹீரோயின் ரோல்கள் தான்.

இந்த நிலையில் தான் பார்த்திபனின் உதவியோடு வல்லமை தாராயோ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சாயா.

இந்தப் படத்தை இயக்குபவர் யு.எஸ் ரிட்டர்ன் மதுமிதா.

இதில் கணவன் (பார்த்திபன்) ரொம்ப நல்லவராக இருப்பதால் அவரை விவகாரத்து செய்ய விரும்பும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ளாராம் சாயா.. (என்னாது?)

சொல்லி அடிப்பேன், லெமன் பட வரிசையில் வல்லமை தாராயோவும் சேரமால் இருந்தால் சரி...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil