»   »  டோலிவுட்டைக் கலக்கும் 'சண்டமாருதம்' நாயகி

டோலிவுட்டைக் கலக்கும் 'சண்டமாருதம்' நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி மன்னரா சோப்ரா, டோலிவுட்டில் வரிசையாக 3 படங்களை அடுத்தடுத்துக் கைப்பற்றியிருக்கிறார்.

பாலிவுட் நடிகையான மன்னரா சண்டமாருதம், காவல் போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ், இந்தி பெரிதாக கைகொடுக்காத நிலையில் டோலிவுட் உலகம் மன்னாவிற்கு கைகொடுத்துள்ளது.

Mannara Chopra busy in Telugu Movies

தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் ரப், சுனிலின் ஜக்கன்னா மற்றும் சாய் தரன் தேஜாவுடன் திக்கா என்று மாறிமாறி நடித்துக் கொண்டிருக்கிறார்.

பூரி ஜெகன்நாத் படத்திற்காக கொல்கத்தா சென்றிருக்கும் மன்னரா, ஹோலி பண்டிகையை ரப் படக்குழுவுடன் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.

"3 படங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. வருண் தேஜாவுடன் இணைந்து நடிப்பதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்" என்று டோலிவுட் வாய்ப்புகள் குறித்து சமீபத்திய பேட்டியில் மன்னரா தெரிவித்திருக்கிறார்.

Mannara Chopra busy in Telugu Movies

மே வரை பிஸி என்பதால் வேறு புதிய படங்கள் எதையும் இவர் ஒப்புக்கொள்ளவில்லையாம். அக்கா ஹாலிவுட்டை ஆள, தங்கை டோலிவுட்டைக் கலக்குகிறார்.

நல்ல சகோதரிகள்...

English summary
Priyanka Chopra Cousin Mannara Chopra busy with Telugu Movies till May.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil