»   »  எனக்கு எதுவும் ஆகலை, நான் நல்லாருக்கேய்யா... நடிகை மனோரமா

எனக்கு எதுவும் ஆகலை, நான் நல்லாருக்கேய்யா... நடிகை மனோரமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் நலமாக உள்ளேன் என்றும், என் உடல் நிலையில் எந்த குறையும் இல்லை என்றும் மனோரமா தெரிவித்துள்ளார்.

நடிகை மனோரமா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் நேற்று காலை முதல் செய்திகள் பரவியது. இந்தி திரையுலகில் மனோரமா என்ற துணை நடிகை உயிரிழந்தார். இந்த செய்தியே தவறாக இங்கு பரவியுள்ளதாக பின்னர் தகவல் வெளியானது.

நேற்று மாலையில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வெற்றிகொண்டாட்டத்தில் இருந்த போது மனேரமா இறந்துவிட்டதாக தியாகராயநகர் பக்கம் செய்தி பரவியது. சரி ஆச்சி வீட்டு பக்கத்தில் தானே இருக்கிறோம் ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாமே என்று போனால் அதற்கான சுவடே இன்றி அந்த தெருவே அமைதியாக காட்சியளித்தது.

வழக்கம்போல இதுவும் வதந்திதான் என்று பேசாமல் திரும்பிவிட்டேன். நினைத்தது போலவே அது வதந்திதான் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

நலம்

நலம்

இந்த நிலையில் கடவுள் அருளால் நான் நலமாக இருக்கிறேன். நேற்றிலிருந்து நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

என் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கும் பெண்களுக்கும் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கும் நன்றி.

வதந்திதான்

வதந்திதான்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழம்பெரும் இந்தி நடிகை மனோரமா காலமானார். அவரை பற்றி ஏதோ ஒரு மலேசிய பத்திரிகையில் செய்தி வெளியானது. அதை வைத்து நான்தான் இறந்துவிட்டதாக வதந்தி பரவிவிட்டது. இவ்வாறு மனோரமா கூறினார்.

ஆச்சி மனோரமா

ஆச்சி மனோரமா

தமிழ் திரை உலகிலும் அவரது ரசிகர்களாலும் ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் மனோரமா கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவினால் சிரமப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Senior actress Manorama has denied all the rumours about her health condition.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil