»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சரத்குமார் நடிக்கும் ஏய் படத்தில் படு கவர்ச்சியாய் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடப் போகிறார் மந்த்ரா.தமிழில் ஹீரோயினாக நடித்து வந்த மந்த்ரா சான்ஸ்கள் போனதால் அஜீத்தின் ராஜா படத்தில் ஒருபாட்டுக்கு டான்ஸ் ஆடினார்.

இதைத் தொடர்ந்து அதே போன்ற அழைப்புகளே வரவே, தெலுங்கிலும் கன்னடத்திலும் தாத்தா ஹீரோக்களுடன்ஹீரோயினாக நடிக்கப் போய்விட்டார். இப்போது அந்த சான்ஸ்களும் ஓவர்.

இதனால் தமிழில் மீண்டும் அலையோ, அலை என அலைந்து ஏய் படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட சான்ஸ்பிடித்துள்ளார். தொடர்ந்து இதே போல ஒரு பாட்டுக்கு ஆடத் தயார் என்று அதிரடி அறிவிப்பும் செய்திருக்கிறார்மந்த்ரா.

மீனாவின் கவர்ச்சி அலை

மந்த்ராவைப் போலவே தமிழில் மார்கெட் போன மீனா, மலையாளத்தில் நடித்தார். அங்கும் இவரது ஆட்டம்குளோஸ். இதையடுத்து கன்னடத்தில் கால் பதித்திருக்கிறார். மூன்றாந்தர கன்னடப் படங்களில் ஏகத்துக்கும் கவர்ச்சிகாட்டி நடித்து வருகிறார்.

பணம் குறைவு தான் என்றாலும் நிறைய வாய்ப்புக்கள் வருவதால் பெங்களூரிலேயே டேரா போட்டு கிடைத்தவாய்ப்புக்களை அள்ளிப் போட்டுக் கொண்டு நடிக்கிறார்.

கன்னட டிவிக்களின் மிட் நைட் மசாலா பாடல்களில் மீனாவின் பாடல்கள் கட்டாயம் இடம் பெற்று விடுகின்றன.அந்த அளவுக்கு எக்ஸ்போஸ் செய்து வருகிறார்.

மீனாவை தமிழ் டிவி தொடர்களில் இழுத்து வரும் திட்டத்தில் சில தயாரிப்பாளர்கள் இறங்கியுள்ளனர். இந்தப்பொறுப்பு குஷ்புவிடம் தரப்பட்டிருக்கிறதாம். ஆனால், இதில் ஏனோ மீனாவின் தாயார் மல்லிகாவுக்கு விருப்பம்இல்லையாம்.

இதனால் மகளை தொடர்ந்து கன்னடப் படங்களில் நடிக்குமாறு சொல்லிவிட்டாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil