»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil
குட்டி ராதிகா தற்போது தமிழில் நடித்து வரும் படம் மீசை மாதவன். இவர் முதல் படம் வெளியானது தமிழில் அல்ல, கன்னடத்தில்.நீலமேக சியாமளா என்ற படத்தையடுத்து இவர் நடித்த நீவே நினகாகி கர்நாடகத்தில் 175 நாட்கள் ஓடியது. பின்னர் இயற்கை படம்மூலம் தமிழில் அறிமுகமானார்.

பளிச் சென்று முகமும், இயல்பான நடிப்பும் இருந்ததால் இயற்கை படம் எதிர்பார்த்த அளவு ஓடாவிட்டாலும் கூட, வர்ணஜாலம்உள்பட பல படங்களில் ஒப்பந்தமானார். ஆனால் அவரது துரதிஷ்டம், அடுத்து வந்த வர்ணஜாலமும் ஒப்பேறவில்லை. இதையடுத்துஇவரை வைத்து படமெடுக்க இருந்த தயாரிப்பாளர்கள் ப்ராஜெக்ட்களை கைவிட்டுவிட இப்போது ராதிகாவின் கைவசம் மீசைமாதவன் மட்டுமே உள்ளது.

இந்தப் படமாவது கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் குட்டி ராதிகா.

பாவம், பிரியாமணி

ராதிகாவைப் போலவே கவலையில் இருக்கும் இன்னொருவர் பிரியா மணி. கண்களால் கைது செய் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ஏகப்பட்ட வாய்ப்புக்கள் இவரைத் தேடி வந்தன. முதல் படமே பாரதிராஜாவின் படம் என்பதால் அதுமிகப் பெரிய வெற்றி பெறும், ஒரு ரவுண்ட் வரலாம் என்று நம்பியிருந்தார் பிரியாமணி

ஆனால், கண்களால் கைது செய் படத்தின் தோல்வி பாரதிராஜாவைவிட பிரியாமணியை மிகவும் பாதித்துவிட்டது. இப்போது இவரைத்தேடி எநத்த் தயாரிப்பாளரும் வரக் காணோம். அட்வான்ஸ் கொடுத்தவர்கள் அத்தோடு நிறுத்திக் கொண்டுவிட்டனர். இவர் புக்செய்யப்பட்ட எந்தப் படத்தின் சூட்டிங்கும் தொடங்கவில்லை.

தனுசுக்கு ஜோடியாக இவர் நடந்து கொண்டிருந்த பாலுமகேந்திரா படத்தின் சூட்டிங்கும் நின்று போய்விட்டது.

மேலும் க.கை.செய் படத்தின் ஹீரோ வசீகரனுடன் பிரியாமணிக்கு பிரியம் ஏற்பட்ட இருவரும் வெளிப்படையாகவே சுற்றஆரம்பித்ததால் பிற இளம் ஹீரோக்கள் பிரியாவுடன் நடிக்க விரும்பவில்லை. இதனால் பெங்களூரில் போய் ஓய்வெடுத்தவர்இப்போது திரும்பி வந்துள்ளார்.

கோடம்பாக்கத்தின் ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி வருகிறார். கவர்ச்சியான வேடம் என்றாலும் சரி, வெளுத்துக்கட்டுகிறேன், ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று வாய்விட்டு கேட்டு வருகிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil