»   »  நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்

நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஊர்வசியின் முன்னாள் கணவர் மனோஜ் கே ஜெயன் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன் என மலையாள நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

சுந்தர் தாஸ் இயக்கத்தில் திலீப், மஞ்சு வாரியர், மனோஜ் கே. ஜெயன் உள்ளிட்டோர் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான மலையாள படம் சல்லாபம். அந்த படத்தில் திலீப்பும், மஞ்சு வாரியரும் காதலர்கள்.

திலீப் மஞ்சுவை பிரிந்துவிடுவார். இதனால் விரக்தி அடைந்த மஞ்சு உயிரை மாய்த்துக் கொள்ள செல்வார் அப்போது அவரை மனோஜ் கே ஜெயன் காப்பாற்றுவார். இது தான் கதை.

மஞ்சு

மஞ்சு

இறுதி காட்சி அதாவது தற்கொலை செய்ய முயற்சிக்கும் காட்சியை படமாக்கியபோது தனக்கு நேர்ந்தது குறித்து மஞ்சு வாரியர் தற்போது பேட்டி அளித்துள்ளார்.

தற்கொலை

தற்கொலை

கதைப்படி ஓடும் ரயில் முன்பு குதிக்க செல்ல வேண்டும் அதற்குள் மனோஜ் வந்து காப்பாற்றுவார். ஆனால் நான் நடிப்பு என்பதை மறந்து கதாபாத்திரமாகவே மாறி ஓடும் ரயிலில் குதிக்க பார்த்தேன் என்று மஞ்சு தெரிவித்துள்ளார்.

மனோஜ்

மனோஜ்

நான் கதாபாத்திரமாகவே மாறி ரயில் முன்பு குதிக்க சென்றபோது மனோஜ் ஓடி வந்து தடுத்தும் அவரை தள்ளிவிட்டு சென்றேன். இதை உணர்ந்த மனோஜ் வந்து என் கையை பிடித்து இழுத்து ஓங்கி ஒரு அறை கொடுத்தார் என்று கூறியுள்ளார் மஞ்சு.

அறை

அறை

மனோஜ் ஓங்கி அறைந்த பிறகு தான் நான் செய்யவிருந்த தவறு புரிந்து மயங்கி விழுந்தேன். அவர் மட்டும் என்னை காப்பாற்றாமல் இருந்திருந்தால் அன்றே நான் இறந்திருப்பேன் என்கிறார் மஞ்சு.

English summary
Malayalam actress Manju Warrier said that it was Manoj K Jayan who saved her life in 1996 otherwise she would be dead and gone.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil