ஸ்ரீதேவி மகளுக்கு திருமணமா? இணையத்தில் பகிர்ந்த போஸ்ட்.. கடுப்பான ஃபேன்ஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் தனது வசீகரமான அழகால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். ஸ்ரீ தேவியின் மகள் என்ற அறிமுகத்தோடு சினிமாவில் அறிமுகமான ஜான்விகபூர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள செய்தி இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது

80ஸ் காலகட்டத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கோலிவுட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி சினிமாவில் இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து டாப் நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே இருந்துவிட்டார். அதன் பின், இவர் தமிழ் சினிமாவில் தலைகாட்டவே வில்லை.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்: சினிமா மீது ஆர்வம் கொண்ட ஜான்வி கபூர், கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'தடக்' என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்ல. இவர் அறிமுகமான முதல் படமே ஜான்விக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரீஸ், ரோகி, குட்லக், ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில படத்தில் நடித்து வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிற்குள் நுழைந்தார். கொரட்டாலா சிவா இயக்கிய படம் பான் இந்திய படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் வெளியாகி 100% லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்தது.

Sridevi Janhvi Kapoor rumours
Photo Credit:

கடுப்பான பேன்ஸ்: தேவாரா திரைப்படத்தை தொடர்ந்து தற்போது, ராம் சரணின் புதிய திரைப்படமான RC16 என்ற பெயரில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், ஜெகபதி பாபு, திவ்யா, சிவராஜ் குமார் என பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'வருகிற 29-ந் தேதியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு பதிவினை போட்டு இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள், ஜான்வி கபூர் தனது காதல் குறித்து அறிவிக்க இருப்பதாகவும் அல்லது திருமணம் பற்றி அறிவிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் தனது புதிய படம் குறித்து அறிவிப்பை அவர் வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் கடுப்பான ரசிகர்கள் ஜான்வி கபூரை திட்டிதீர்த்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X