»   »  அம்மா ஆனார் மீனா!

அம்மா ஆனார் மீனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீன் கண்ணழகி மீனா அம்மாவாகி விட்டார். அது எப்படி என்று மண்டை குழம்ப வேண்டாம். மலையாளப் படம் ஒன்றில் அம்மாவாக நடிக்கிறார் மீனா.

தமிழ் மீனாவைத் தள்ளி விட்டு விட்டது. தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் மீனா டிவி பக்கம் தாவிப் பார்த்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல அவர் நடிக்கும் நாடகத்திற்கு வரவேற்பு பலமாக இல்லை.

பலவீனமாகி விட்ட அந்தத் தொடர் இப்போது லேட் நைட் சிலாட்டுக்குத் தள்ளிப் போய் விட்டது. இதனால் அப்செட் ஆகிப் போன மீனா, அந்தத் தொடரில் விருப்பமே இல்லாமல் நடித்து வருகிறாராம். ஆனால் சம்பளத்தை மட்டும் குறைத்துக் கொள்ள மறுக்கிறாராம்.

தமிழில்தான் மீனாவுக்கு மூடு விழா, ஆனால் மலையாளத்தில் மீனாவுக்கு விரித்த கம்பளத்தை இன்னும் அப்படியேதான் போட்டு வைத்துள்ளனர். இதனால் அப்படியும் இப்படியுமாக ஓரிரு படங்களில் தலையைக் காட்டிக் கொண்டுதான் உள்ளார்.

சமீபத்தில் ஒரு படம் வந்ததாம். அதில் மீனாவுக்கு வித்தியாசமான கேரக்டர். அதாவது அப்படத்தின் நாயகி மீனா கிடையாது. கோபிகா தான் நாயகி. அவருக்கு அம்மாவாக நடிக்கிறார் மீனா.

முதலில் இந்தக் கேரக்டரை ஏற்க ரொம்பவே யோசித்தாராம் மீனா. இருந்தாலும் கோபிகாவை விட மீனா கேரக்டருக்குத்தான் அதிக முக்கியத்துவமாம். இதனால்தான் சரி என்று மண்டையை ஆட்டினாராம் மீனா.

இந்தக் கேரக்டரில் நடிப்பது குறித்து பட கமுக்கமாக இருக்கிறார் மீனா. ஆனால், கோபிகா ரொம்பப் பெருமையாக எல்லோரிடமும் சொல்லி வருகிறார். இதனால் மீனா கடுப்பாக உள்ளார்.

மலையாளத்தில் எப்படிப்பட்ட ரோல் என்றாலும் நடிக்கத் தயாராக இருக்கிறாராம் மீனா. ஆனால் தமிழில் மட்டும் நடிச்சா ஹீரோயின் இல்லாட்டி நோ என்று திட்டவட்டமாக கூறுகிறார்.

நொங்கு திங்கறதுக்கு ஒரு ஊரு, நோவைப் போக்க இன்னொரு ஊரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil