»   »  மீனாவின் கூடாரம்

மீனாவின் கூடாரம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் தன்னைத் தத்தளிக்க விட்டு விட்டதால் அதிருப்தியில் இருந்து வந்த மீனாவுக்கு இப்போது மலையாளம்தான் நிம்மதியைக் கொடுத்துள்ளதாம். புதிதாக நடித்துள்ள கூடாரம் என்ற மலையாளப் படம் தனது மலையாள மறு பிரவேசத்திற்கு பேருதவியாக இருக்கும் என நம்புகிறார் மீனா.

சூப்பர் ஸ்டார்களின் செல்லப் பிள்ளையாக இருந்து அவர்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டவர் மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சத்யராஜ் என முன்னணி நடிகர்ளுடன் பெரிய ரவுண்டு அடித்த மீனா, விஜய், அஜீத் ஆகிய இளம் நாயகர்களுடனும் இணைந்து நடித்தார்.

ஆனால் புதுமுகங்களின் வரவும், கிளாமர் போட்டிகளும் மீனாவை பீல்டு அவுட் ஆக்கி விட்டன. இதனால் டிவி சீரியலுக்குத் தாவிய மீனா, மறு பக்கம் பட வேட்டையையும் தொடர்ந்த வண்ணம்தான் இருந்தார்.

இருந்தாலும் தமிழில் அவருக்கு வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை. மாறாக மலையாளம்தான் மறுவாழ்வு கொடுத்துள்ளது. தற்போது கூடாரம் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு மீனாவுக்குக் கிடைத்துள்ளதாம்.

இதில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம் மீனா. இந்த படம் தனக்கு மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் கூட புதுவாழ்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் .கூடாரம் வரட்டும், அப்புறம் பாருங்க என் கூறி வருகிறாராம் மீனா.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil