»   »  கவர்ச்சிக்கும் எல்லை உண்டு: மீனா

கவர்ச்சிக்கும் எல்லை உண்டு: மீனா

Subscribe to Oneindia Tamil
தெத்துப் பல் அழகி மீனாவும் கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார். இருந்தாலும் தனது கவர்ச்சிக்கு எல்லை உண்டு,அதைத் தாண்டி போக மாட்டேன் என்றும் கூறுகிறார் மீனா.

மீனாவுக்கு இப்போது இலையுதிர் காலம். தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் ஏதுமில்லை. "மானிடன், "தானம்ஆகிய இரு படங்களில் மட்டுமே இப்போதைக்கு இவர் நடித்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடன்"சந்த்ரோற்சவம், கன்னடத்தில் தமிழ் ஆட்டோகிராப்பின் ரீமேக் ஆகியவை மட்டுமே அவரது கைவசம் உள்ளன.

பெண் ரசிகைகள் அதிகம் பேரை வைத்துள்ள நீங்கள், கவர்ச்சி காட்டுவது சரியாக இருக்குமா என்று மீனாவிடம்கேட்டபோது, அப்படி இல்லை. நான் கவர்ச்சி காட்டுவது புதிதல்ல. இதற்கு முன்பு நடித்த பல படங்களில்,தேவையான அளவுக்கு கிளாமர் காட்டியுள்ளேன். அதை யாரும் பெரிய அளவில் விமர்சிக்கவில்லை.

எனது கேரக்டருக்குத் தேவைப்பட்டால், அவசியம் என்றால் மட்டுமே நான் கிளாமர் காட்டுவேன். அதற்காகவரைமுறையின்றி கவர்ச்சியாக நடிக்க முடியாது, அப்படி நடிக்கவும் மாட்டேன். எதற்கும் ஒரு எல்லை உண்டு,அந்த எல்லைக்குள்தான் நடிக்க முடியும், நடிப்பேன்.

ரொம்ப நாளா தேசிய விருது வாங்கணும்னு ஒரு ஆசை என்னுடைய மனதில் இருக்கிறது. ஒரு நாள் நிச்சயமாகஅது நிறைவேறும். அதுமாதிரியான வாய்ப்பு வந்தால் விட மாட்டேன். (விருதுப்பட டைரக்டர்கள் கவனிக்க..)

மலையாளத்தில் நான் நடித்துள்ள அனைத்துப் படங்களுமே வெற்றிப் படங்கள் தான் தெரியுமா ? குறிப்பாக சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் நான் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டுகள்.

சமீபத்தில் வெளியான "உதயனானு தாரம் என்ற படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அந்தப் படத்தில் நான்ஒரு நடிகையாகவே நடித்ததுள்ளேன். மலையாளத்தில் அடுத்தடுத்து படங்கள் ஹிட்டாவது எனக்கு ரொம்பசந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. அங்கு எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளார்கள்.

தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லை என்று கூற மாட்டேன். எல்லாவிதமான ரோல்களிலும் தமிழில் நடித்துவிட்டேன். அதேபோன்ற வாய்ப்புகள் இப்போது பிற மொழிகளிலும் வருவதால் அங்கு நடித்து வருகிறேன்.மற்றபடி தமிழில் நான் நடிக்கவில்லை என்று கூற முடியாது.

"ஷாக் படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அது மாதிரியான வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவேஆசைப்படுகிறேன். அந்தப் படத்திற்கு எனக்கு விருது கிடைக்கும் என்கிறார்கள், பார்ப்போம்.

சிங்கிள் பாட்டுக்கு ஆட்டம் போடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. ஷாஜகான் படத்தில் விஜய் கூப்பிட்டார்,அதற்காக ஆடினேன் என்ற மீனாவை தடுத்து நிறுத்தி, சரி, கல்யாணம் எப்போ, எப்படி என்று கொக்கியைப்போட்டோம்.

இந்தக் கேள்வியைக் கேட்டதும் சற்று சுறுசுறுப்பான அவர், கண்டிப்பா கல்யாணம் செய்து கொள்வேன். காதல்பிளஸ் அரேன்ஜ்டு கல்யாணமாகத்தான் அது நிச்சயம் இருக்கும் (யாரப்பா அந்த மச்சக்கார மணவாளன் ?) .நிச்சயமா எல்லோருக்கும் சொல்லி விட்டுத்தான் கல்யாணம் செய்துப்பேன். கவலையே வேண்டாம் என்றார் மீனா.

சீக்கிரமாக சட்டுப்புட்டுன்னு மேட்டர முடிங்கப்பா!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil