»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

மீனாவுக்கு விரைவில் மாங்கல்யம் தந்துனானேவாம்!

வீட்டில் படு விறுவிறுப்பாக மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

அன்புள்ள ரஜினிகாந்த்தில் குட்டிப் பெண்ணாக அறிமுகமாகிய மீனா, மதமதவென வளர்ந்து என் ராசாவின்மனசிலே படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார்.

ரஜினியின் படத்தில் சிறுமியாக அறிமுகமாகிய அவர் எஜமானில் அவருக்கே ஜோடியாக நடித்தார்.

குறுகிய காலத்திலேயே தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக மாறிய மீனா, சத்யராஜில் தொடங்கி அஜீத்,விஜய் வரை அத்தனை ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

எல்லோரையும் போலவே மீனாவுக்கும் இடையில் காதல் வந்தது. ரப்பர் டான்ஸர் எனப்படும் அந்த நடிகரைதீவிரமாக காதலித்தார் மீனா. ஆனால் ரப்பர் ஏற்கனவே உடன் ஆடிய துணை நடிகைக்கு குழந்தையே கொடுத்தவர்என்பதாலும் பெரும் ஜொள் ஆசாமி என்பதாலும் அந்தக் காதலை மீனாவின் அம்மா அங்கீகரிக்கவில்லை.

இதையடுத்து ரப்பர் அடுத்துடுத்து தன்னுடன் ஆடிய அறிமுக நாயகிகளை காதலிப்பதில் பிசியாகிவிட்டார்.ஆனாலும் மீனாவின் ஒருதலைக் காதல் தொடர்ந்து கொண்டிருந்தது.

இதனால், நடிகர் கார்த்திக்கை விட்டு மீனாவுக்கு அட்வைஸ் செய்யச் சொல்லி, அவரது காதலை மறக்கச் செய்தார்அம்மா. இப்போது மீனா தெளிவாக இருக்கிறாராம். கையில் சில படங்களே உள்ளனவாம்.

எனவே இது தான் மீனாவுக்கு கல்யாணம் செய்து வைக்க சரியான நேரம் என்று அவரது அம்மா நினைக்கிறாராம்.கையில் இருக்கும் படங்களை முடித்தவுடன் டும் டும் கொட்டிவிட இருக்கிறாராம்.

மாப்பிள்ளை பார்க்கும் படலம் உலகளவில் நடந்து கொண்டிருக்கிறதாம்.

வெளிநாட்டிலும் குறிப்பாக சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் மாப்பிள்ளை கிடைத்தால் நன்றாகஇருக்கும் என்று மீனாவின் அம்மா அபிப்பிராயப்படுகிறாராம்.

சீனா, ஜப்பான் என்றார் மீனாவுக்கு உயிர். அமெரிக்கா என்றால் பணம். இதனால் தான் இந்த நாடுகளைச் சேர்ந்தமாப்பிளைகளுக்கு முன்னுரிமையாம்.

யாராவது எளிஜிபிள் பேச்சிலர்ஸ் இருந்தால் அப்ளிகேஷன் போட்டுப் பாருங்களேன்!

Read more about: actress, bride, cinema, films, groom, meena, music, rahman, songs

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil