»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீனா ரெடியாகி விட்டார். அம்மா ஒரு சூப்பர் மாப்பிள்ளையை பார்த்து வைத்துள்ளாராம். பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். முடிந்ததும் விரைவில் டும்டும்தானாம்.

கல்யாணத்திற்குப் பிறகு மீனா மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அட்டகாசமான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்அம்மா மல்லிகா.

சைதாப்பேட்டை பகுதியில் நடிகை லட்சுமி குடியிருக்கும் வீட்டுக்கு அருகேதான் இந்தப் புதிய வீடு கட்டப்பட்டு வருகிறதாம். மீனாவின் விருப்பப்படி அமையும்இந்த வீட்டை, தனது மகளுக்கு கல்யாணப் பரிசாகக் கொடுக்கவுள்ளாராம் அம்மா.

தனது மகளுக்கு வெளிநாடுகளிலும் மாப்பிள்ளை பார்தது வந்தார். இப்போது இறுதி செய்யப்பட்டுள்ள மாப்பிள்ளையின் விவரம் தெரியவில்லை.

முன்னதாக மீனாவை லவ்விக் கொண்டிருந்த ரப்பர் நடிகரிடமிருந்து மகளைப் பிரித்துக் கொண்டு வருவதற்கு படாதபாடு பட்டுவிட்டார்மல்லிகா. இப்போது ரப்பரிடமிருந்து முழு அளவில் மகளைப் பிரித்துவிட்டதாக மல்லிகா நினைத்துக் கொண்டிருக்கிறார். கோலிவுட்டில்இதைச் சொன்னால் சிரிக்கிறார்கள்.

வில்லேஜுக்குப் போகிறார் பாலா

பாரதிராஜாவைப் பின்பற்றப் போகிறாராம் இயக்குனர் பாலா. பாரதிராஜா, தனது முதல் இரு படங்களையும் கிராமத்து சப்ஜெக்டில்எடுத்தார். 3-வது படத்தை சிட்டி ஸ்டைலில் எடுத்தார்.

அதே யுத்தியை பாலாவும் பின்பற்றவுள்ளார். ஆனால் கொஞ்சம் மாறுதலாக. தனது முதல் இரண்டு படங்களையும் சிட்டி சப்ஜெக்டில் எடுத்தபாலா, 3-வது படத்தை வில்லேஜ் சப்ஜெக்டில் எடுக்க முடிவு செய்துள்ளார்.

கதை குறித்த டிஸ்கஷனை சொந்த ஊரான மதுரைக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாராம் பாலா. பாரதிராஜாவைதூக்கி சாப்பிட்டு விட்டார் என்று இந்தப் படத்திற்குப் பிறகு தன்னைப் பற்றி அத்தனை பேரும் பேச வேண்டும் என்று பாலாஆசைப்படுகிறாராம்.

பாலாவின் இந்தப் புதிய படத்தில் வடிவேலுவுக்கு முக்கிய கேரக்டர் கொடுக்கப்படவுள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil