»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக இருக்கும் எனக்கு இப்போதுதிருமணத்திற்கு என்ன அவசரம் என்று மீனா கூறியுள்ளார்.

பிரபல டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான பிரபு தேவாவுடனான காதலை வெற்றிகரமாக முறித்த மீனாவின்பெற்றோர், அவருக்குத் தீவிரமாக மாப்பிள்ளை பார்க்க தொடங்கிவிட்டதாக சமீப காலமாகச் செய்திகள்வெளியாகிக் கொண்டுள்ளன.

ஆனால் தற்போது திருமணத்திற்கு என்ன அவசரம்? நான் இப்போது தான் படு பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன் என்று திருமணத்தை ஒத்திப் போடும் முயற்சியில் இறங்கியுள்ளார் மீனா.

மேலும் அவர் கூறுகையில்,

நம்ம வீட்டுக் கல்யாணம், காதலே சவாசம், இவன், லவ்வர்ஸ், படைவீட்டு அம்மன், ஜெயா, பொக்கிஷம், க்ளிக்போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறேன்.

மேலும் மலையாளத்திலும் தெலுங்கிலும் இரண்டு படங்கள் நடித்து வருகிறேன். சினிமாவில் இவ்வளவு பிஸியாகஇருக்கும் போது வீட்டில் எனக்கு எப்படி கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்? திருமணத்திற்கு இப்போதுஎனக்கு அவசரமும் இல்லை.

ஜப்பானிலோ சீனாவிலோ மாப்பிள்ளை தேடும் முடிவு சுத்தமாக இல்லை. ஜப்பானில் ரசிகர்கள் இருக்கிறார்கள்என்பதற்காக ஜப்பானில் மாப்பிள்ளை தேடும் அவசியமும் இல்லை. திருமணத்திற்கு ஏற்பாடு நடப்பதாக வரும்செய்திகள் முற்றிலும் தவறானவை என்றார் "பிஸி" மீனா.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil