»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீனா உடலை அழகாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அத்தோடு சில புதிய பழக்கங்களையும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார்.

வீட்டில் யோகாசனம் செய்ய ஆரம்பித்துள்ளார் மீனா. இதற்காக ஆசிரியர் ஒருவரையும் அவருக்காக அம்மா மல்லிகா நியமித்துள்ளார். தினசரி யோகாவகுப்பு தவறாமல் நடக்கிறதாம். இது உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ளவாம்.

அடுத்து... தினசரி மீன் சாப்பிட ஆரம்பித்துள்ளார் மீனா. இது எதற்காம்? கண்களையும் தோலையும் பளபளப்புடன் வைத்துக் கொள்ளவாம். தன் மகளுக்கு மீன்இல்லாமல் சோறே தருவதில்லையாம் மீனாம்மா (மீனாவின் அம்மா).

இது தவிர உடலில் அங்கங்கே எக்ஸ்ட்ராவாக ஏறியுள்ள சதைகளைக் குறைக்கும் முயற்சியாக வீட்டிலேயே சைக்ளிங், மேக்னட் பெல்ட் எனவிதவிதமான உடற் பயிற்சிகளையும் வியர்க்க விறுவிறுக்க செய்து வருகிறார் மீனா.

அது சரி, இதெல்லாம் எதற்காம்? இழந்த பெருமையை மீட்பதோடு, மும்பை வரவுகளுக்கு தான் சற்றும் இளைத்தவள் இல்லை என்று நிரூபிக்கவாம்.

விரைவில் திருமணம் செய்து மகளை செட்டில் ஆக்கவும் அம்மா மல்லிகா தீவிரமாக முயன்று வருகிறார். திருமணம் ஆனாலும் தொடர்ந்து நடிக்கவும்தான் உடலை கிச் ஆக்கி வருகிறாராம் மீனா.

நடக்கட்டும், நடக்கட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil