»   »  மம்மூட்டியுடன் நடித்ததால் தான் ரஜினியுடனும் அப்படி நடிக்க ஆசைப்படுகிறாரா மீனா?

மம்மூட்டியுடன் நடித்ததால் தான் ரஜினியுடனும் அப்படி நடிக்க ஆசைப்படுகிறாரா மீனா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மீனா மலையாள நடிகர் மம்மூட்டிக்கு மகள், மனைவி மற்றும் அம்மாவாக நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அங்கிள் அங்கிள் என்று அழைத்தவர் பின்னர் அவருக்கே ஜோடியாக நடித்தார்.

எஜமான், முத்து உள்ளிட்ட படங்களில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தார்.

 ரஜினி

ரஜினி

ரஜினியுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தபோது த்ரில்லாக இருந்தது என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார் மீனா. தற்போது ரஜினிக்கு அம்மாவாக நடிக்க ஆசைப்படுகிறாராம்.

 மம்மூட்டி

மம்மூட்டி

1984ம் ஆண்டு வெளியான ஒரு கொச்சு கதா ஆரும் பறையாத கதா படத்தில் மீனா நடிகர் மம்மூட்டியின் மகளாக நடித்திருந்தார். வளர்ந்து குமரியான பிறகு அதே மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்தார்.

 ஜோடி

ஜோடி

2001ம் ஆண்டு வெளியான ராக்ஷச ராஜாவு படத்தில் தான் மீனா முதன்முதலாக மம்மூட்டி ஜோடியாக நடித்தார். அதன் பிறகு பல படங்களில் அவர்கள் ஜோடி சேர்ந்தனர்.

 அம்மா

அம்மா

2014ம் ஆண்டு வெளியான பால்யகால சகி படத்தில் மம்மூட்டிக்கு அம்மாவாக நடித்திருந்தார் மீனா. பேபி மீனா, குமாரியாகி தற்போது அம்மாவாகவும் நடிக்க வந்துவிட்டார். அவர் பேபியாக இருந்தபோது ஹீரோவாக இருந்த மம்மூட்டி மற்றும் ரஜினி இன்னும் ஹீரோக்களாக நடித்து வருகிறார்கள்.

English summary
Meena who acted as Mammootty's daughter in Oru Kochu Katha Aarum Parayatha Katha has paired up with him in many movies later. She even acted as his mother in Bhalyakala Sakhi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil