»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தமிழில் படத்துக்குப் படம் புதிய நடிகைள் மும்பை, கேரளா, பெங்களூர், ஆந்திராவில் இருந்து இறக்குமதியாகிக்கொண்டிருப்பதால் மீனா, ரம்பா, தேவயானி, மந்த்ரா என ஒரு காலத்தில் கலக்கிய நடிகைகளின் பாடு படுதிண்டாட்டமாகியுள்ளது.

தமிழில் நடிக்க சான்ஸ் இல்லாததால் சொந்த ஊரான கேரளத்துக்குப் போய் சில படங்களில் நடித்து வருகிறார்தேவயானி. அங்கு கொடுக்கப்படும் சம்பளம் நம் ஊரில் முன்னணி டிவி நடிகைளுக்கே தரப்படுவதால் தமிழில்சின்னத் திரையில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் தேவயானி.

தேவயானியைப் போலவே சொந்தப் படம் எடுத்து, நடித்து, நொடிந்து, நொந்து போன ரம்பாவும்டிவியில் நடிக்கத் தயாராவதாய் சொல்கிறார்கள்.

இப்போது பட வாய்ப்புகள் எதுவுமின்றி வீட்டில் சும்மா இருக்கும் ரம்பா, ‘த்ரீ ரோசஸ்’ படத்திற்காக வாங்கியகடனைக் கேட்டு கடன்காரர்களால் நெருக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார். இதையடுத்து கலைநிகழ்ச்சி, ஒருபாடலுக்கு நடனம் என்று இறங்கி விட்டார். பாலுமகேந்திராவின் ‘உனக்கே உயிரானேன்’ படத்தில் ஒரு பாடலுக்குநடனமாடியுள்ளார். விரைவில் டிவிக்கும் வருவாராம்.

கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருக்கிறார் மந்தரா. வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால், சரத்குமார் நடிக்கும் ‘ஏய்’படத்தில் ஒரு பாடலுக்கு ஏகத்துக்கும் கவர்ச்சியாய் ஆட்டம் போட்டுள்ளார் மந்த்ரா. அஜீத்தின் ராஜா படத்திற்குப்பின் இவர் ஆடிய சிங்கிள் டான்ஸ் இது. வேறு படங்கள் ஏதும் இல்லாததால், வாய்ப்புகள் கிடைத்தால் இதேபோன்று தொடர்ந்து படு கவர்ச்சி ஆட்டம் போடவும் முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே தேவயானியைப் போலவே சின்னத்திரைக்கு மீனாவைக் கொண்டு வந்துவிட பலத்த முயற்சிநடைபெறுகிறது.

கோலிவுட்டில் தற்போது இளம் கதாநாயகர்கள் கொடி பறப்பதால் மீனாவுக்கு வாய்ப்பு ஏதும் இல்லை. இதைப்பயன்படுத்தி, மீனாவை சின்னத்திரை பக்கம் இழுத்துவிட மெகா சீரியல் தயாரிப்பாளர்கள் பகீரத முயற்சி செய்துவருகிறார்கள்.

ஆனால், மீனாவுக்கு கன்னடம் மறுவாழ்வு தந்துவிட்டது. அங்கு கிட்டத்தட்ட மும்தாஜ் ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டிவரும் மீனாவுக்கு செலவெல்லாம் போக படத்துக்கு சில லட்சம் தேறிவிடுகிறது. இதனால் முடிந்தவரை பணம்ஈட்டுவதற்காக பெங்களூரிலேயே மகளை டேரா போட வைத்துள்ள அவரது தாயார், மகளின் திருமணத்திட்டதைக் கூட ஒத்தி வைத்துவிட்டாரம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil