தெறி பேபி நைனிகா இது...அசர வைக்கும் மீனாவின் அம்மா – மகள் வைரல் ஃபோட்டோஷுட்

சென்னை : குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் மீனா. 1990 களில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து கலக்கியவர். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

Meena - Nainika latest photoshoot goes viral

குழந்தை நட்சத்திரமாக மட்டும் 45 படங்களில் நடித்துள்ளார் மீனா. குழந்தையாக இருக்கும் போதே சிவாஜி, ரஜினி ஆகியோருடன் இணைந்து நடித்தவர் மீனா. தமிழில் மட்டுமின்றி மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, விஷ்ணுவர்தன் என தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் மீனா.

சில மியூசிக் ஆல்பங்களில் பின்னணியும் பாடி உள்ள மீனா, டப்பிங்கும் பேசி உள்ளார். குழந்தை நட்சத்திரமாக இருந்தது முதல் முன்னணி ஹீரோயின் ஆனது முதல் பல விருதுகளை வென்றுள்ளார் மீனா. டிவி சீரியல்கள்கள் சிலவற்றில் நடித்துள்ள மீனா, முன்னணி நடிகையான பிறகு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்றுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த மீனா, தனது மகள் நைனிகாவை விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார். தனது ஐந்தாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நைனிகா. பிறகு தானும் மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார்.

தற்போது ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் மீனா. தொடர்ந்து அண்ணாத்த, த்ரிஷ்யம் 2 படங்களின் தெலுங்கு ரீமேக், மலையாளத்தில் பெயரிடப்படாத படம் போன்றவற்றில் ஒரே சமயத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதோடு மோகன்லாலை வைத்து ப்ருத்விராஜ் இயக்கும் ப்ரோ டாடி படத்திலும் மீனா நடித்து வருகிறார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் மீனா தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

பிறந்தநாள் ஸ்பெஷலாக மீனாவும், அவரது மகள் நைனிகாவும் ஒரே மாதிரி லாவண்டர் நிற உடை அணிந்து ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளனர். அழகிய சிரிப்பில், மிக சாதாரணமாக போஸ் கொடுத்து நடத்தப்பட்ட இந்த ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அம்மா - மகளின் இந்த அழகிய ஃபோட்டோஷுட் மீனா ரசிகர்களை மட்டுமல்ல, பலரையும் கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X