»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

மீனாவால் டைரக்டர் பாலாவுக்கும், தயாரிப்பாளர் துரைக்கும் லேசான ஹார்ட் அட்டாக் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.அந்த அளவுக்கு அவர்களை பயறுத்தியிருக்கிறார் மீனா.

பிதாமகன் படத்தில் ஒரு முதுமையான பெண் வேடம். தற்கு யாரைப் போடலாம் என்று விவாதம் நடந்தது.6 மாதங்களுக்கு முன் இந்தப் படம் தயாராகியிருந்ததால் இந்த ரோலுக்கு நிச்சயம் ராஜ்ஸ்ரீயைத் தான்போட்டிருப்பார் பாலா.

தனது சேது படத்தில் பைத்தியக்காரி வேடத்ததையும் நந்தா படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாகஊமை போன்ற வேடத்தையும் ராஜ்ஸ்ரீக்குத் தந்தார். ஆனால், ராஜ்ஸ்ரீயோ பாலா மீது பைத்தியமாகத்திரிய அவரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டுவிட்டார் டைரக்டர்.

இப்போதைய விஷயத்துக்கு வருவோம். பிதாமகனில் முதுமை தட்டிய பெண் வேடத்திற்கு யாரைநடிக்க வைக்கலாம் என்று யோசித்து பார்த்தபோது பாலாவுக்கு, விஜயசாந்தி மனதில் வந்துள்ளார்.

அவரை தயாரிப்பாளர் துரை அணுகியபோது நிலாவையே வாங்கி விடும் அளவுக்கு ஒருதொகையைக் கேட்டு களேபரப்படுத்தியிருக்கிறார். இதனால் விஜயசாந்தியை மறந்து விட்டனர்பாலாவும் துரையும்.

வேறு யாரைப் போடலாம் என்று மண்டையைக் ககக்கியபோது தயாரிப்பாளர் துரைக்கு மீனாநினைவுக்கு வந்தார். அவரது வீட்டுக் கதவை பாலாவும், தயாரிப்பாளர் துரையும் தட்டினர்.

சான்ஸ் ஏதும் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்துள்ள மீனா இவர்களிடம் ரொம்பவே ஆர்வத்துடன்பேசினார். இருவரும் கேரக்டரை சொல்லி விட்டு ஒப்புதல் கேட்டுள்ளனர்.

நடிக்கிறேன், ஆனால் ரூ. 50 லட்சம் சம்பளமாக கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார் மீனா.

அவர் என்னமோ கூலாகத்தான் கூறியுள்ளார், ஆனால் பாலாவுக்கும், துரைக்கும் சன் ஸ்டிரோக்மற்றும் ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட எஃபக்ட்கள் ஏற்பட அங்கிருந்து வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்துள்ளார்களாம்.

இந்தப் படத்தில் விக்ரமையே பாலா குறைந்த ரேட்டுக்குத் தான் பிடித்துப் போட்டுள்ளார். தனக்கு வாழ்வுகொடுத்தவர் என்பதால் கொடுப்பதைக் கொடுங்கள் என்று பாலாவிடம் விக்ரமும் பெருந்தன்மையாகக்கூறிவிட்டார். அதே போல இதில் நடிக்கும் சூர்யாவின் ரேட்டும் கூட ரூ. 50 லட்சத்தைக் கூடத் தொடவில்லை.

படத்தையே ரூ. 2 கோடியில் முடித்துவிடும் திட்டத்தில் இருக்கும் இவர்களை மீனா அதிர்ச்சியில் திக்குமுக்காடவைத்து திருப்பி அனுப்பியிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil