»   »  செந்தில் ஹீரோ.. ஜோடி மீனா!

செந்தில் ஹீரோ.. ஜோடி மீனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Meena
ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்ட மீனாவுக்கு அவரே எதிர்பார்க்காத மிகப் பெரிய 'புரோமோசன்' கிடைத்துள்ளது. ஆதிவாசியும் அதிசயபேசியும் படத்தில் செந்திலுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்.

வடிவேலு, விவேக் எல்லாம் ஹீரோக்களாக நடிக்கும் நிலையில் செந்திலையும் ஹீரோ ஆக்கி இம்சை பண்ண ரெடியாகிவிட்டனர். ஆதிவாசியும் அதிசயபேசியும் என்ற படத்தில் செந்தில் ஹீரோ ஆகிறார்.

இவருக்கு ஜோடியாக நடிக்க தமிழ் சினிமாவின் அன்றைய, இன்றைய பல முன்னணி நடிகைகளிடம் பேசிப் பார்த்தனர். எல்லோரும் ஓடி பதுங்கிவிட்டனர். இதையடுத்து சம்பளத்தை பல லகரங்கள் உயர்த்திப் பார்த்தனர். ஆனாலும் பலனில்லை.

நமீதாவிடம் போய் பெரும் தொகைக்கு ஒரு செக்கைக் காட்டி கால்ஷீட் கேட்டனர். என்ன விட்டுருங்க என்று நமீதா ஓடிவிடவே மீனாவிடம் போய் நின்றனர்.

முதலில் மீனாவுக்கு பெரும் அதிர்ச்சியாகத்தான் தான் இருந்ததாம். ஆனால், சம்பளம் தான் அவரை சம்மதிக்க வைத்ததாம். அள்ளித் தரும் தமிழ், தெலுங்கில் சான்ஸ்களே இல்லாத நிலையில் டிவி சீரியல்களிலும் கன்னட சினிமாவிலும் பொழுதைப் போக்கி வரும் மீனாவிடம் பெரும் தொகையை சம்பளமாகத் தருவதாக சொன்னதாம் தயாரிப்பாளர் தரப்பு.

இதையடுத்து மேலும் கொஞ்சம் கூடுதலாகக் கேட்டுப் பார்த்தாராம் மீனா. அதற்கும் ஓகே சொல்லப்படவே செந்திலுடன் நடிக்க சம்மதித்துவிட்டாராம்.

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்குப் பின் தமிழ் சினிமாவில் நடிக்கப் போகிறார் மீனா.

படத்தை மாலன் இயக்குகிறார். சூட்டிங் மலேசிய காட்டுப் பகுதிகளில் நடக்கிறதாம். மலேசியா புறப்பட தயாராகி வருகின்றனர் மீனாவும் செந்திலும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil