»   »  இந்தியில் சான்ஸ் தேடும் மீனா

இந்தியில் சான்ஸ் தேடும் மீனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

வயசு போன காலத்தில் மீனாவுக்கு ஏன் தான் இந்த ஆசை வந்ததோ தெரியவில்லை.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளத்திலும் வாய்ப்பிழந்த அவர் இப்போது கன்னடத்தில் ஹீரோயினாகநடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கமல்-ராதிகா நடித்து சூப்பர் ஹிட் படமான சுவாதி முத்யத்தை ரீ-மேக் செய்தார்கள் கன்னடசினிமாக்காரர்கள். அதில் ராதிகா ரோலை மீனா தான் செய்தார். அடுத்து முதல் மரியாதை படத்தை எடுக்கப்போகிறார்கள். அதில் சிவாஜி ரோலில் விஷ்ணுவர்த்தன் நடிக்க, ராதா செய்த மீன்காரி வேஷம் கட்டப் போவதுமீனா தான்.

மீனாவைப் போலவே பானுபிரியா உள்ளிட்ட முன்னாள் தமிழ் ஹீரோயின்கள் எல்லாம் இப்போது கன்னடத்தில்நடித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் அப்படியே கல்யாணம் வரை கன்னடத்தில் வண்டியை ஓட்டிவிடலாம்என்ற நம்பிக்கையில் இருந்தார் மீனா.

ஆனால், அதிலும் மண்ணைப் போட்டுவிட்டனர் மும்பை வரவுகள். தமிழ், தெலுங்கைத் தொடர்ந்து இப்போதுகன்னடத்திலும் மும்பை புயல்களின் வரவு அதிகரித்துவிட்டது. இதனால் மீனாவை புக் செய்த இருதயாரிப்பாளர்கள் கடைசி நேரத்தில் கழற்றிவிட்டுவிட்டார்கள்.

நிலைமை இவ்வளவு சீக்கிரத்தில் மோசமாகும் என்று எதிர்பார்க்காத மீனா அதிரடியாய் களம் இறங்கியிருக்கிறார்.அவ்வளவு லேசில் சினிமாவை விட்டுவிட மனசில்லாத மீனா, சமீபத்தில் மும்பைக்குச் சென்ற அவர் இந்தியில்நடிக்க முயன்று வருகிறார்.

அங்குள்ள மாடல் கோ-ஆர்டினேட்டர்களிடம் தன்னை கொஞ்சம் படு தாராளமாக படம் எடுக்கச் சொல்லிஆல்பம் தயாரித்து அதை தானே சில இயக்குனர்களை சந்தித்துக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

மேலும் கமிஷனுக்கு ஆட்களைப் போட்டும் சான்ஸ் பிடித்துத் தரும் வேலையை ஒப்படைத்திருக்கிறார்.

அத்தோடு தமிழில் வில்லியாக நடிக்கவும் தயார் என்று அதிரடி அறிவிப்பு செய்தும் சான்ஸ் தேடி வருகிறார்.

மீனாவின் முயற்சிகள் பலிக்க வாழ்த்துவோம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil