»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விருமாண்டி பட வெற்றிக் களிப்பில் இருக்கும் கமல், அதே ஜோரில் தனது அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார்.சினிமா விமர்சகர்களை அசத்தும் அளவுக்கு ஒரு படம் எடுத்தால், அதற்கு அடுத்த படத்தை செமகாமெடியாகத் தருவது கமலின் வழக்கம்.

அத்தகைய காமெடிப் படம்தான் கிருஷ்ணலீலா. அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம் என்று கமலுடன்வெற்றிக் கூட்டணி அமைத்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்தான் இப்படத்தையும் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் கமலுடன் ஜோடி சேர மீனாவுக்கும், ரம்யா கிருஷ்ணனுக்கும் பெரிய குடுமிப்பிடி சண்டையேநடக்கிறது. கமலுக்கு மீனா நெருக்கும், ரம்யாவுக்கு ரவிக்குமார் நெருக்கம் என்பதால் இருவரையுமே ஜோடிசேர்த்து விட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் படத்தைப் பற்றி இன்னொரு தகவலும் பரவிக் கிடக்கிறது. இதில் கமலுக்கு 5 ஜோடிகளாம். அதில்ஒரு வேடத்துக்கு கெளதமி துண்டு விரித்து, ரிசர்வ் செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. அதே போலஅபிராமியும் இடம் பிடிக்க முயல்வதாக சொல்கிறார்கள்.

ஒருவர்தான் ஹீரோயின் என்றால், மீனாவுக்குத்தான் சான்ஸ் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கோடம்பாக்கத்தில் தற்போது இளவயது ஹீரோக்களின் ராஜ்யம் நிலவுவதால், அவர்களுக்கு ஜோடியாக முடியாதநிலையில், மீனா கன்னடப் பக்கம் போய்விட்டார்.


அங்கு ஒரு குழந்தைக்குத் தாயாக அவர் நடித்த சுவாதிமுத்யம் (சிப்பிக்குள் முத்து படத்தின் ரீ-மேக்) படம் சூப்பர்டூப்பர் ஹிட். அதைத் தொடர்ந்து கணிசமான கன்னட வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்துள்ளன. இதனால் அங்கேயே டேரா போட்டுள்ளார் மீனா. ஆனாலும் தமிழ் சினிமாவில் கிடைக்கும் காசைப் பார்க்கும்போது கன்னடசினிமா வெறும் தூசு என்பதால் தமிழில் எப்படியாவது சான்ஸ் பிடிக்க அலைகிறார்.

கமலுடன் ஜோடி சேர்ந்துவிடுவதில் தீவிரமாக இருக்கும் மீனாவுக்கு அர்ஜூனும் உதவிக் கரம் நீட்டியுள்ளார்.அவருக்கு ஜோடியாக அன்புச் சகோதரன் என்ற படத்திலும் நடிக்கப் போகிறார். அண்ணன்-தங்கை பாசத்தைமையமாகக் கொண்டு வெளிவந்த தவரிகே பாதங்கி என்ற கன்னட படத்தின் தழுவல்தான் இந்தப் படமாம்.

அர்ஜூனுக்கு படங்கள் ஓடுகிறதோ இல்லையோ அவரை வைத்து படமெடுப்பது மட்டும் நிற்பதே இல்லை!அப்படியே கையில் படமில்லாவிட்டாலும் தானே தயாரித்து, இயக்கி, கதையெழுதி, நடித்து, அடித்து-உதைத்து(ஆக்ஷன்) படத்தை ரிலீஸ் செய்து கொண்டே தான் இருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil