»   »  வந்துட்டாரு மீனாட்சி கருப்பசாமி!

வந்துட்டாரு மீனாட்சி கருப்பசாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொக்கி என்ற ஹிட் படத்தைக் கொடுத்த கையோடு கரண் புக் ஆன படம் கருப்பசாமி குத்தகைதாரர். படம் ரெடியாகி விட்டது. ஆடியோவை தற்போது ரிலீஸ் செய்துள்ளனர்.

சிறு வயது முதல் நடித்து வருபவர் கரண். மலையாளத்தில் இவரது பெயர் ரகு. அங்கு பாலகனாக பல படங்களில் நடித்தவர். வயதுக்கு வந்த பின்னர் நம்மவர் படம் மூலம், கமல்ஹாசனால் தமிழ் சினிமாவுக்கு இழுத்து வரப்பட்டவர்.

வித்தியாச முகம் காட்டி வில்லங்கமாக நடிப்பதில் கரணுக்கு நிகர் அவரேதான். வில்லனாகவும், கேரக்டர் ரோலிலும் கலக்கி வந்த கரண், திடீரென தனது நடிப்புக்கு பிரேக் கொடுத்தார். நடித்தால் இனி ஹீரோவாக மட்டுேம என்ற கொள்ைக முடிவை எடுத்தார்.

அவரது காத்திருப்புக்கு பலன் கிடைத்தது, கொக்கி வந்தது. வித்தியாச சினிமாக்களை ரசிக்கும் தமிழ் ரசிகர்கள், கொக்கியையும் ரசித்தனர், வரவேற்றனர். இதோ, கரணும் ஒரு ஹீேரா.

கொக்கியைத் தொடர்ந்து கரண் ஒப்புக் ெகாண்ட படம் கருப்பசாமி குத்தகைதாரர். மதுரைப் பக்கத்தை பின்புலமாகக் கொண்ட படம் என்பதால் படு நக்கலாகவும், நையாண்டியாகவும் படம் வந்திருக்கிறதாம்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மூர்த்தி இயக்கத்தில் கரண், மீனாட்சி ஜோடியில் உருவாகியுள்ள இப்படத்தில் வடிவேலு முக்கிய நடிகராக உள்ளார். அவரது காெமடி களேபரம் வயிற்றைப் பதம் பார்க்க தயாராக இருக்கிறது.

தினா இசையமைத்துள்ளார். திைரப்பட வர்த்தக சபையில் நடந்த 20 இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்னிலையில் வித்தியாசமாக நடந்து பாடல் வெளியீட்டு விழா.

படத்தில் வரும் ஐந்து பாடல்களில் 2 பாட்டுக்களை அனைவருக்காவும் போட்டுக் காட்டினர். படு கூலாக வந்துள்ளன பாடல்கள். தினாவின் இசை ரசிக்க வைக்கிறது.

வெளியீட்டுக்குப் பின்னர் கரண் கூறுகையில், கொக்கியை விட இந்தப் படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தைத் தொடர்ந்து தீ நகர், என்ற படத்தில் நடிக்கவுள்ளேன். அப்படம் கருப்பசாமிக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது என்றார். கருப்பசாமி ஏப்ரல் மாதம் ரசிகர்களை சந்திக்க வருகிறாராம்.

தீ நகர் படத்தை பிரண்ட்ஸ் சினிமா சார்பில் சேது தயாரிக்கிறார். இதில் கரணும் ஒரு பார்ட்னராம். கிளப்புங்க, பங்காளிகளா

கருப்பசாமி குத்தகைதாரர் நாயகி மீனாட்சி, இயக்குநர்களின் விருப்ப நாயகியாக மாறி வருகிறார். பெயர் நம்ம பக்கமா இருக்கே என்று நினைத்து விட வேண்டாம். இந்த மீனாட்சி, மும்பைக்காரம்மாவாம். ஆனாலும், தமிழ் கலாச்சாரம் மீனாட்சிக்கு ரொம்பவே நல்லா தெரியுமாம், புரியுமாம்.

இதனால் படப்பிடிப்பின்போது கூட வசனங்களையும், சூழலையும் எளிதில் உள் வாங்கிக் கொண்டு அற்புதமாக பேசி கைத்தட்டல் வாங்கி விடுகிறாராம். நடிப்பில் மட்டுமல்ல கிளாமரிலும் கூட அசத்தோ அசத்து என்று அசத்த மீனாட்சி ரெடிதானாம்.

நல்ல மூக்கும், அழகு முழியுமாக இருக்கும் மீனாட்சிக்கு, தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். டப்பு ஜாஸ்தி என்பதால் மட்டுமல்ல, வித்தியாசமான கேரக்டர் கொடுப்பார்கள், படத்தை வேகமாக எடுப்பார்கள், பிக்கல், பிடுங்கல் (மும்பை பக்கம் ெராம்ப ஜாஸ்திண்ணே) அதிகம் இருக்காது என்பதால் தமிழை அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம்.

ஷூட்டிங் ஸ்பாட்டிலும் மீனாட்சி படு பாந்தமாக, அமைதியாக இருந்து அத்தனை பேரின் அன்பையும் வாரி விடுகிறாராம். மீினாட்சியின் கேரக்டரால் வியந்து போன இயக்குநரும், கரணும், அவருக்கான காட்சிகளை கூடுதலாக்கி விட்டார்களாம்.

கூடுதல் சந்தோஷத்துடன் குஜாலாக நடித்து வருகிறார் மீனாட்சி. மும்பை மீனாட்சியை மதுைர மீனாட்சி காப்பாத்தட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil