»   »  பின்ன வரும் பிங்கி

பின்ன வரும் பிங்கி

Subscribe to Oneindia Tamil

பிங்கி சர்க்கார் என்ற பெயரை எங்கேயும் கேட்டதாகத் தெரியவில்லையே என்று குழம்ப வேண்டாம். இந்த பிங்கிதான் கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் நாயகியாக வரும் முத்துப் பெண் மீனாட்சி.

அச்சு அசல் மும்பைக்காரி என்று அடித்துச் சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு திராவிட முகம் நம்ம பிங்கிக்கு. அதேபோல இவர் படு மாடர்ன் பார்ட்டி என்று யார் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு மும்பை வீதிகளில் படு ஃப்ரீக்காக உலா வருபவராம் பிங்கி.

பல முகங்களைத் தேடியும் ஒருவரும் கிடைக்காமல் கடைசியில் சிக்கி, கருப்பசாமியின் ஜோடியானவர்தான் பிங்கி. இவரது பெயரைப் பார்த்த இயக்குநர், இந்தப் பெயரில் அறிமுகமானால் அம்புட்டுத்தான் என்று சொல்லி, மீனாட்சி என்ற பெயைரச் சூட்டி அறிமுகப்படுத்தியுள்ளாராம்.

முதல் படமே தமிழ் என்பதால் படு சந்தோஷமாக இருக்கும் பிங்கி, மும்பையில் மாடலிங்கில் கலக்கி வரும் தற்காலத்து அல்ட்ரா மாடர்ன் பெண்ணாம். என்னை இப்படத்தில் பாவாடை, தாவணியில் பார்க்கும் ரசிகர்கள், மும்பை பக்கம் வந்தால் எனது அதி நாகரீக உடையில் பார்த்தால் என்ன நினைப்பார்களோ என்று வெட்கப் பூ பூக்கிறார் பிங்கி என்ற மீனாட்சி.

பிங்கிக்கு மாடர்ன் வேடங்களில் நடிக்கவும், பாந்தமான கேரக்டரில் நடிக்கவும் அலாதிப் பிரியமாம். அதேசமயம், சுட்டிப் பெண்ணாக சுட்டித்தனம் செய்யும் கேரக்டர்களிலும் அசத்த படு ஆவலாக உள்ளாராம்.

கருப்பசாமி எனது நடிப்புத் திறமையைக் காட்ட உதவும். அதேசமயம், மாடர்ன் பெண்ணாக, அஜீத், விஜய், சிம்பு போன்றவர்களுடன் திறமை காட்டவும் துடியாக காத்திருக்கிறேன் என்கிறார் பிங்கி.

பிங்கியின் நடிப்பும், கிளாமரும் சொங்கித்தனமாக இல்லாமல் சரிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil