»   »  விசன மீனாட்சி!

விசன மீனாட்சி!

Subscribe to Oneindia Tamil

கிளாமர் காட்ட தான் ரெடி என்றாலும், இயக்குநர்கள் வேண்டாம் என்று வீம்பு பிடிப்பதாக விசனப்படுகிறாராம் கருப்பசாமி மீனாட்சி.

கருப்பசாமி குத்தகைதாரர் மூலம் தமிழுக்கு வந்துள்ள மீனாட்சி படு பிராக்டிகலாக இருக்கிறார். கிளாமர் இல்லாவிட்டால் இங்கு கிள்ளுக் கீரையாகி விடுவோம் என்பதை சரியாக புரிந்து வைத்துள்ளார் மீனாட்சி.

முதல் படத்தில் கிளாமருக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டதால் படு வருத்தமாக இருந்தாராம் மீனாட்சி. கிளாமர் போர்ஷன் எனக்குக் கிடையாதா என்று வாய் விட்டே கேட்டாராம். இந்தக் கதைப்படி உங்களுக்கு கிளாமர் இல்லை என்று கூறி சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார்களாம்.

கருப்பசாமி ஹிட் ஆகி விட்டதால், பட வாய்ப்புகள் மீனாட்சியைத் தேடி ஓடி வருகின்றனவாம். வருகிற இயக்குநர்களிடம் எல்லாம், கிளாமருக்கு நான் ரெடிதான், எனவே கிளாமர் போர்ஷன் இருந்தாலும் பரவாயில்லை, தைரியமாக நடிக்க நான் ரெடி என்கிறாராம்.

ஆனால் கதையோடு வருகிற இயக்குநர்கள் எல்லாம், பாப்பா, முதல் படத்தில் நீங்கள் ஹோம்லியாக நடித்ததால்தான் எடுபட்டீர்கள். எனவே அதே டைப்பிலான கதையுடன்தான் வந்துள்ளோம். அதேசமயம் உங்களுக்கு கிளாமர் சரிப்பட்டு வராது, தேவையில்லாமல் தடம் மாறிடாதீங்க என்று அட்வைஸ் செய்து விட்டுப் போகிறார்களாம்.

கவர்ச்சி காட்ட மறுக்கும் நடிகைகளிடம் காட்டு காட்டு என்று கெஞ்சுவார்கள், நாமே வலியக்க கவர்ச்சிக்கு ரெடி என்று சொன்னாலும் கண்டுக்க மாட்டேன் என்கிறார்களே என்று விசனப்படுகிறாராம் மீனாட்சி.

அடி ஆத்தீ, இதென்ன மதுரைக்கு வந்த சோதனை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil