»   »  பள்ளிக் கூடத்தில் மீனாள்

பள்ளிக் கூடத்தில் மீனாள்

Subscribe to Oneindia Tamil

சேரனின் அண்ணி மீனாள், தங்கர்பச்சானின் பள்ளிக்கூடத்தில் திறமை காட்டிக் கொண்டிருக்கிறார்.

சேரனின் சீரிய கண்டுபிடிப்புகளில் மீனாளும் ஒருவர். பார்க்க பளிச்சென இருக்கும் மீனாள், மதுரைக்கார மல்லிகை. ஆனால் படித்ததெல்லாம் கோவையிலாம். இப்ேபாது சினிமாவுக்காக சென்னையில் வாசம் புரிகிறார்.

தவமாய் தவமிருந்தது படத்துக்குப் பிறகு எனக்கேற்ற ரோல்கள் கிடைக்கவில்லை. இதனால்தான் பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது. ஆனாலும் இப்போது கை நிறையப் படங்கள் இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன் என்கிறார் மீனாள்.

தங்கர்பச்சானின் பள்ளிக்கூடத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மீனாள். இதில் இவருக்கு கரும்புத்தோட்டத்தில் வேலை பார்க்கும் பெண் வேடமாம்.

இந்த கேரக்டரை நான் ரசித்துச் செய்து வருகிறேன். தங்கர்பச்சான் சார், சிறந்த இயக்குநர். அவர் விரும்புகிற அவுட் புட் கிடைக்கும் வரை விடமாட்டார். நானும் அதிக டேக் வாங்காமல் நடித்து வருகிறேன்.

எனக்கு சிறு வயது முதலே சினிமா மீது காதல் சார், அதனால்தான் தவமாய் தவமிருந்து பட வாய்ப்பு வந்தபோது உடனே ஒத்துக் கொண்டேன். அம்மா உடனே ஓ.கே செய்து விட்டார். ஆனால் அப்பாதான் தயங்கினார். அம்மாவின் ஆசியுடன் அப்படத்தில் நடித்தேன்.

எனக்குள் உறங்கிக் கிடந்த நடிப்பத் திறமையை அப்படியே கொண்டு வந்தவர் சேரன் சார்தான் என்கிறார் மீனாள்.

சினிமாக்காரன் படத்தில் படு கிளாமராக நடித்திருக்கிறீர்களாமே என்று கேட்டோம். ஆமாம், அது கிளாமர் கலந்த வேடம்தான். இருந்தாலும் ஆபாசமாக இருக்காது. இதில் நான்தான் ஹீரோயின். முதலியே சொல்லி விட்டார்கள், கிளாமராக நடிக்க வேண்டும் என்று. நானும் ஹீரோயின் வாய்ப்பு என்பதால் மறுக்கவில்லை. கிளாமரும் செய்துதான் பார்ப்போமே என்று பிராக்டிகலாக பேசுகிறார் மீனாள்.

சமீபத்தில் வெளியான தீபாவளியிலும் மீனாளைப் பார்த்திருக்கலாம். பாவனாவின் தோழியாக அதில் நடித்துள்ளார். ஆனால் அவர் நடித்த நிறைய சீன்களை கட் செய்து விட்டார்களாம். வருத்தப்படுகிறார் மீனாள். இதேபோல, ஜில்லுனு ஒரு காதல் படத்திலும் மீனாள் நடித்திருந்தாராம். ஆனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் டபுள் மீனிங் வசனங்கள் இருந்ததால் கட் செய்து விட்டார்களாம்.

ஒரே மாதிரியான ரோல்களில் நடிக்காமல், விதவிதமான கேரக்டர்களில் அடித்து அசத்த வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இப்போது மலையாளத்தில் சூரிய கிரீடம் என்ற படத்தில் நடிக்கிறேன். அதேபோல, தமிழில் எஸ்.ஜே.சூர்யாவின் தங்கச்சியாக வியாபாரி படத்திலும் நடித்தேன் என்று அடுக்கினார் மீனாள்.

மாநிறமா இருந்தாலும் ஜில்லுன்னு இருக்கீங்களே என்று மீனாளிடம் கேட்டால் மதுரை வெட்கம் முகத்தை மறைக்க, நான் உடம்பை காதலிக்கும் பெண். நமது உடல் அழகாக, பொலிவாக இருந்தால்தான் மனசும் தெளிவாக இருக்கும். அதனால் தினசரி ஜிம்முக்குப் போய் உடம்பை வடிவாக வைத்துக் கொள்கிறேன் என்றார் புன்னகையுடன்.

ஜில்லுன்னு இருக்கு மீனாள் பேசப் பேச ...

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil