»   »  சேரன் படத்தில் மீரா ஜாஸ்மீன்

சேரன் படத்தில் மீரா ஜாஸ்மீன்

Subscribe to Oneindia Tamil

கஸ்தூரிமான் என்ற மலையாள ரீமேக் படத்தில் மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடிக்கிறார். இதை இயக்கப் போவது மீராவுடன் எப்போதும் ஓயாமல் கிசுகிசுக்கப்படும் லோகிததாஸ்.

தமிழில் மணிரத்னம் எப்படி விருதுகளை வாங்கிக் குவிக்கும் இயக்குனராக இருக்கிறாரோ, அதேபோலத்தான் மலையாளத்தில் லோகிததாஸ்.

ஆரம்பத்தில் கதை, வசனகர்த்தாவாக தனது கலையுலகப் பயணத்தைத் தொடங்கிய லோகிததாஸ், தனி ஆவர்ததனம், கமலதளம், அமரம், கவுரவர்கள், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா உட்பட 56 படங்களுக்கு கதை, வசனம் எழுதினார்.

இவர் இயக்குனராக அறிமுகமான பூதக்கண்ணாடி படம் தேசிய விருது வாங்கியது. அதன் பிறகு இவர் இயக்கிய பல படங்கள் நிறைய விருதுகளையும், ஏராளமான வசூலையும் வாரிக் குவித்தன.

மம்மூட்டி, மோகன்லால் உட்பட பல மலையாள நடிகர்கள் தேசிய விருது வாங்கியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு. மஞ்சுவாரியார், கலாபவன் மணி, சம்யுக்தா வர்மா, மீரா ஜாஸ்மீன், திலீப், காவேரி என ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே அறிமுகப்படுத்தியவர்.

மீராவை அறிமுகப்படுத்தியதோடு அவரை தன் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கிறார் என்பது தான் விஷயமே. இதை வைத்துத் தான் மீராவின் வீட்டில் பிரளயம் வெடிக்க, வீட்டை விட்டே வெளியேறினார் மீரா.

வயதானவரான லோகிததாஸ் எனக்கு அப்பா மாதிரி என்கிறார். இதை மீராவின் வீட்டில் மட்டுமல்ல கேரள சினிமாவில் யாரும் நம்ப மறுப்பது தான் மீராவை நோகச் செய்யும் விஷயம்.

அண்மையில் இவர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கஸ்தூரிமான். இந்தப் படம் கேரளாவில் 10க்கும் மேற்பட்ட விருதுகளை வாரிக் குவித்தது. அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த மீரா ஜாஸ்மீனுக்கு 15க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்தன.

அத்தகைய சிறப்பு வாய்ந்த கஸ்தூரிமான் அதே பெயரிலேயே தமிழில் ரீ மேக் செய்யப்படுகிறது. படத்தை இயக்கப் போவது லோகிததாஸ். கதாநாயகனாக நம்மூர் பிரசன்னா நடிக்கிறார். கதாநாயகியாக மீரா ஜாஸ்மீன் நடிக்கிறார். (லோகிததாசுக்காக படத்துக்கு பைனான்சும் மீரா தான் என்றும் சிலர் கிசுகிசுக்கிறார்கள்)

நவீன தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவரான ஜெயமோகன் இந்தப் படத்திற்கு வசனம் எழுதுகிறார். கலைஞர் கருணாநிதியின் படைப்புகள் எல்லாம் இலக்கியமில்லை என்று கூறி பெருத்த சர்ச்சையைக் கிளப்பினாரே, அதே ஜெயமோகன்தான்.

படத்திற்கு இசையமைப்பது இசைஞானி இளையராஜா. இந்தப் படத்தின் சூட்டிங் வருகிற 15ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

ஆய்த எழுத்து படத்திற்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் மீரா ஜாஸ்மின் இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தவிர மீரா ஜாஸ்மின் கையில் இருக்கும் ஒரே தமிழ்ப் படம் சேரன் இயக்கப் போகும் பொக்கிஷம்.

தவமாய் தவமிருந்து படத்தை முடித்தபின்பு தான், பொக்கிஷம் படத்தை சேரன் இயக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அதில் சேரனே கதாநாயகனாக நடிக்க மீரா ஹீரோயினாகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil