»   »  பாவ்னாவை தூக்கும் மீரா

பாவ்னாவை தூக்கும் மீரா

Subscribe to Oneindia Tamil

பாலாவின் படங்கள் எடுக்கப்படுபவை அல்ல, செதுக்கப்படுபவை. இதனால் ஒரு படத்துக்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வார். இறுதியில் மலைக்க வைக்கும் படத்தைதத் தருவார். அதே போலத்தான் நான் கடவுள் படத்தையும் உருவாக்கி வருகிறார்.

நான் கடவுள் படத்திலிருந்து அஜீத்தை தூக்கிவிட்டு ஆர்யாவை கொண்டு வந்த பாலா, அதே பாணியின் ஹீரோயின் பாவனாவையும் தூக்கிவிட்டு மீரா ஜாஸ்மீனைப் போடவுள்ளாராம்.

பாலாவின் படங்கள் எடுக்கப்படுபவை அல்ல, செதுக்கப்படுபவை. இதனால் ஒரு படத்துக்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வார். இறுதியில் மலைக்க வைக்கும் படத்தைதத் தருவார். அதே போலத்தான் நான் கடவுள் படத்தையும் உருவாக்கி வருகிறார்.

இந்த படத்துக்காக பாவ்னாவிடம் வாங்கப்பட்ட கால்ஷீட், ஒரு காட்சி கூட எடுக்கப்படாமல் காலாவதியாகிவிட்டதாம். போட்டோ செஷனில் நடித்ததோடு சரி. படத்தில் பாவ்னா ஒரு பிரேமில் கூட நடிக்கவில்லை.

ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கும் இந்த சூட்டிங்கில் இனி பாவ்னா நடிக்க கால்ஷீட் இல்லை. மீண்டும் அவரிடம் கால்ஷீட் வாங்குவது கஷ்டம் என்கிறார்கள். அவ்வளவு படங்களை அவர் கையில் வைத்திருக்கிறார்.

இதனால் பாவ்னாவிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் வேறு ஹீரோயினைப் போட முடிவு செய்யப்பட்டுவிட்டதாம். அந்த ஹீரோயின் வேறு யாருமல்ல, மீரா ஜாஸ்மீன் தான்.

தமிழில் ஹீரோக்களுக்கு தான் முக்கியத்துவம் தர்றாங்க.. அங்க நான் நடிக்க ஒன்னுமில்லே என்று மலையாளப் பத்திரிக்கைகளில் குறைபட்டுக் கொண்ட சேச்சி மீராவிடம் இப்போது கையில் எத்தனை படங்கள் தெரியுமோ.. 5 படங்கள்.

நடிக்க வாய்ப்பில்ல, அப்புறம் ஏன் இத்தனை படங்களை ஒத்துக்கனும்.. எல்லாம் டப்பு தான் காரணம்.

மலையாளத்தில் மீரா ஜாஸ்மீன் பாட்டி ஆகும் வரை நடித்தாலும் தமிழில் 3 வருடத்தில் சம்பாதிக்கும் பணத்தை ஈட்ட முடியாது.

இதனால் தமிழ் வாய்ப்புகள் வந்தால் லபக் என லவட்டிக் கொள்கிறார். அதே நேரத்தில் , தெலுங்கு, கன்னட வாய்ப்புகளையும் விடுவதில்லை. ஆனால், தெலுங்கில் வேறு தொல்லைகள் ரொம்ப ஜாஸ்தி என்பதால் செலக்டிவாகவே தேர்வு செய்கிறார். சம்பளத்தையும் முடிந்தவரை கறக்கிறார்.

இன்றைய கணக்குப்படி மீராவிடம் கன்னடம், தெலுங்கில் தலா ஒரு படமும், மலையாளத்தில் 2 படங்களும் (ஒன்றில் மம்மூட்டி, இன்னொன்றில் திலீப் ஹீரோ) தமிழில் 5 படங்களும் இருக்கின்றன.

இதில் பரத்துடன் நேபாளியும் பாலாவின் நான் கடவுளும் அடக்கம். இதைத் தொடர்ந்து விக்ரமுடனும் விஷாலுடனும் அடுத்தடுத்து ஜோடி போடப் போகிறார்.

கொசுறு:

வீட்டில் சண்டை போட்ட பின் கேரளத்தில் கடவந்த்ரா என்ற இடத்தில் மாபெரும் மாளிகையைக் கட்டியிருக்கிறார் மீரா. இந்த மாளிகைக்கு மீரா வைத்திருக்கும் பெயர் வைபவம். பல கோடிகளை விழுங்கியிருக்கிறதாம் இந்த வீடு. வரும் விசு தினத்தன்று (கேரள வருடப் பிறப்பு) கிரஹப் பிரவேசமாம்.

கிரஹப் பிரவேசத்துக்கு முன்பே வீட்டை பார்த்துவிட்டு வந்துவிட்டாராம் நம்ம எஸ்.ஜே.சூர்யா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil