»   »  நனவான மீராவின் கனவு

நனவான மீராவின் கனவு

Subscribe to Oneindia Tamil

மீரா ஜாஸ்மினின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளதால் பெரும் சந்தோஷத்தில் உள்ளாராம்.

எந்த வேடம் கொடுத்தாலும் அடித்துத் தூள் பண்ணி விடும் திறமை படைத்த சில நடிகைகளில் மீராவும் ஒருவர். மலையாளத்துப் பெண்ணாக இருந்தாலும் கூட தமிழில் படு திறமையாகவும், இயற்கையாகவும் நடிக்கக் கூடியவர் மீரா.

கடைசியாக அவர் நடித்து வெளியான திருமகனில் அவரது நடிப்பைப் பார்த்த கூட நடித்த ராதாரவி, அருமையான நடிப்பு என்று மனம் விட்டுப் பாராட்டினார். சொந்தக் குரலில் பேசி நடித்தால் தேசிய அளவில் சிறந்த நடிகை விருது கண்டிப்பாக கிடைக்கும் என்றும் ஊக்கம் கொடுத்தார்.

விதம் விதமான கேரக்டர் தமிழிலில் கிடைப்பதில்லை என்று முன்பு ஒருமுறை வருத்தப்பட்டுச் சொல்லியிருந்தார் மீரா. நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் வகையிலான வாய்ப்பு தனக்கு கனவாகவே உள்ளதாகவும் அவர் ஆதங்கம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவரது கனவு தற்போது கைகூடியுள்ளது. அதாவது வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு மீராவுக்குக் கிடைத்துள்ளதாம்.

கத்திக் கப்பல் என்ற பெயரில் உருவாகவுள்ள ஒரு படத்தில் மீரா படு வித்தியாசமான ரோலில் நடிக்கவுள்ளார். வீரப்பன் கும்பலை வேட்டையாடிய அதிரடிப்படையிடம் சிக்கி சீரழிந்த ஒரு பெண்ணின் கதையாம் இது.

வீரப்பன் வேட்டையின்போது மலை வாழ் மக்கள் பெரும் கொடுமைகளுக்கு ஆளாகினர். அதிரடிப்படையின் விசாரணை என்ற பெயரில் அவர்கள் பட்ட கொடுமைகளை கதை கதையாக எழுதலாம்.

அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் கத்திக் கப்பல். அதிரடிப்படையிடம் சிக்கி பாலியல் ரீதியாக சித்திரவதைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதையாம் இது.

இந்த கேரக்டர் குறித்து மீராவிடம் கேட்டபோது, கதை குறித்து நான் எதுவும் சொல்லக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த ரோல் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நடிப்புக்கு சவால் விடும் வகையிலான கேரக்டர் இது. நான் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த ஒரு வித்தியாசமான பாத்திரம்.

கஸ்தூரிமான் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தைத்தான் நான் முக்கியமாக கருதுகிறேன் என்றார் மீரா.

கலக்குங்க மீரா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil