»   »  கலாய்க்கும் மீரா வாசுதேவன்

கலாய்க்கும் மீரா வாசுதேவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீரா வாசுதேவன் தனது வளர்ச்சியை தானே கெடுத்துக் கொள்வதாக கோடம்பாக்கத்தில்முனுமுனுக்கிறார்கள்.

மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்த தமிழ்ப் பெண்ணான மீராவை தனது சொந்தப் படமானஉன்னைச் சரணடைந்தேன் மூலம் இரண்டு வருடங்களுக்கு முன் கோடம்பாக்கத்துக்குக் கொண்டுவந்தார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

படம் நீண்ட நாட்களாக உருவாகி கடந்த ஆண்டு வெளியானது. அதில் மிக நன்றாகவே நடித்துநல்ல பெயரும் வாங்கினார். ஆனால், அதைத் தொடர்ந்து வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று நம்பிமெட்ராஸ் ஹோட்டலில் ரூம் போட்டுத் தங்கினார். கூடவே பெரிய குடும்பமும் வந்துதங்கிவிட்டதில், கையில் இருந்து காசெல்லாம் கரைந்தது.

இதனால் மெட்ராஸைக் காலி செய்துவிட்டு மும்பைக்கே போனார். அங்கு தனது டிவி விளம்பரமாடலிங்கைத் தொடர்ந்தார்.

இந் நிலையில் முரளி நடிக்கும் அறிவுமணி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புவந்தது. ஆனால், இந்த முறையும் தனது பெரும் குடும்பத்துடன் மெட்ராசுக்கு வந்துவிட்டார் மீரா.

அவர்களது விமானச் செலவு, ஹோட்டல் பில் எல்லாவற்றையும் இம் முறை தயாரிப்பாளரின்தலையில் கட்டிவிட்டார். இதனால் மீராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தைவிட அவரது இத்யாதிசெலவுகள் பல லகரங்களைத் தொட்டுவிட்டதாம்.

அறிவுமணி தயாரிப்பாளர் நொந்து போய் இதை தன் சக சினிமா ஆசாமிகள் சொல்லி வைக்க,மீராவை தங்களது படங்களில் புக் செய்ய நினைத்திருந்த இருவர் முதல் சுற்று பேச்சோடு விலகிப்போய்விட்டார்களாம்.

அவர்களுக்கு மீண்டும் எத்தனையோ முறை தூது அனுப்பியும் அவர்கள் திரும்பிவரவேயில்லையாம். அறிவுமணி படப் பிடிப்பும் முடியும் நிலைக்கு வந்துவிட்டது. இதனால், அடுத்துமலையாளக் கரையோரம் சான்ஸ் தேடி வலை வீசிக் கொண்டிருக்கிறார் மீரா.

ஆனால், ஒரு தமிழ் காமெடி நடிகரின் சம்பளத்திலேயே மொத்த படத்துக்கான பட்ஜெட்டையும்அடக்கிவிடும் மகா கஞ்சர்களான கேரளத்துக்கு சேட்டன்களிடம் மீரா தனது குடும்பத்து ஹோட்டல்பில்லை எல்லாம் கட்ட முடியாது.

இதை நன்றாகவே உணர்ந்திருக்கும் மீரா, நான் மட்டும் தான் சூட்டிங்குக்கு வருவேன் என்றும்விளக்கமாகவே எடுத்துச் சொல்லி சான்ஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார். (தமிழுக்கு ஒரு நியாயம்,மலையாளத்துக்கு ஒன்னா?). ஆனால், ஏதும் இதுவரை கிளிக் ஆகவில்லை.

இந் நிலையில் விஜய்காந்தை நேரில் சந்தித்து மீரா கொக்கி போட, தனது நெறஞ்ச மனசு படத்தில்வாய்ப்பு தந்திருக்கிறாராம். ஏற்கனவே இந்தப் படத்தில் கேப்டனுக்கு சூசன், மஹிமா என்று இரண்டுபுதுமுக ஹீரோயின்கள். இவர்களோடு இன்னொரு ஹீரோயினாக மீராவையும் சேர்க்கச்சொல்லிவிட்டாராம்.

படத்தில் கண்டாங்கி சேலையில் கொஞ்சம் அப்பிடி, இப்பிடி குதித்து கும்தலக்கா ஆட்டம் போடும்ரோலாம் மீராவுக்கு. சேலையிலேயே, மிச்சம் வைக்காமல் கலாய்ப்பதில் வல்லவர் தான் மீரா. இதைஅறிவுமணி ஸ்டில்களை பார்த்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil