»   »  மீராவின் மகிழ்ச்சியும் சோகமும்

மீராவின் மகிழ்ச்சியும் சோகமும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கையால் விருது வாங்கப் போகும் சந்தோஷத்தை ஒரு புறமும் தனது சொந்த வாழ்வில்ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தந்த சோகத்தை ஒரு புறமும் ஒரு சேர அனுபவித்து வருகிறார் மீரா ஜாஸ்மீன்.

கண்ணிலேயே நிற்கும் முக அழகு, மின்னல் சிரிப்பு, அசத்தல் நடிப்பு என மலையாள சினிமாவை ஒரு கலக்கி கலக்கி விட்டு, தமிழ்சினிமாவுக்கு ரன் படத்தின் மூலம் மீரா ஜாஸ்மீன் வந்தார்.

ரன் படம் ஹிட்டாக, தமிழ் சினிமா இந்த அழகு தேவதையை அள்ளிக் கொண்டது. தொடர்ந்து வந்த படங்கள் பெரிய அளவில்போகாவிட்டாலும், நல்ல நடிகை என்ற பெயரை மீராவுக்குப் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து மலையாளம், தமிழ் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னட சினிமாவிலும் கால் பதிக்கத்தொடங்கினார்.

அந்த நேரத்தில்தான் அவரது சொந்த வாழ்வில் புயலடிக்கத் தொடங்கிவிட்டது. லோகிததாஸூடன் மீரா ஜாஸ்மீன் ரகசியதிருமணம் என்ற கிசுகிசு பரவத் தொடங்கியது. அவரது வீட்டாரே மீராவிற்கு எதிராகப் பேச வீட்டை வெளியேறினார்.

அதனையடுத்த தனது சொத்துக்களை பெற்றோர்களும் சகோதரிகளும் ஏமாற்றி, தங்களது பெயரில் மாற்றிக் கொண்டார்கள்என்று கூறி அதை மீட்க மீரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இப்போது எர்ணாகுளத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வரும் மீரா, ஒரு வயதான மாமியை தனக்குத் துணையாகவைத்திருக்கிறார். அவரது வரவு செலவு கணக்குகளை லோகிததாஸ் கவனித்து வருகிறார்.

கடந்த வருடம் வெளிவந்த, பாடம் ஒண்ணு விலாபம் படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதுஅறிவிக்கப்பட்டிருக்கிறது. சொந்த வாழ்க்கை சோகங்களை மறக்ககடிக்கும் விதமாக இந்த விருது அறிவிப்பு வந்தது.

கலாம் கையால் விருது வாங்கப் போவதை நினைத்தால் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதுபோல் இருக்கிறது என்கிறார் மீரா.

தற்போது தமிழில் சேரனுக்கு ஜோடியாக ஒரு படம் நடிக்கிறார்.

அதோடு லோகிததாஸ் தமிழில் இயக்கும் ஒரு படத்திலும் இவர்தான் ஹீரோயின். இது கஸ்தூரிமான் என்ற மலையாளப் படத்தின்ரீமேக் ஆகும். மலையாளத்திலும் மீராதான் நடித்திருந்தார்.

பிதாமகன் லைலா, ஆட்டோகிராஃப் மல்லிகா போன்ற வேடங்களில் நடிப்பதில் அதிக விருப்பம் என்று கூறும் மீரா, ஆய்தஎழுத்து படத்தில் நடித்ததை மறக்கவே முடியாது என்கிறார்.

இப்ப என் வாழ்க்கை அமைதியை நோக்கி திரும்பியிருக்கிறது. யாரும் அதைக் கலைச்சிறாதீங்க, ப்ளீஸ் என்று குரல் கம்ம கூறும்மீராவின் முகத்தில் பழைய வேதனைகளின் ரேகைகள் ஓடுகிறது.

விடுங்க மீரா, மறுபடியும் ஒரு ஹிட் படம் கொடுத்து பிஸியாகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil