»   »  மீண்டும் தாஸுடன் மீரா!

மீண்டும் தாஸுடன் மீரா!

Subscribe to Oneindia Tamil

இடையில் பிரிந்திருந்த மலையாள இயக்குநர் லோகிததாஸுடன் மீண்டும் இணைகிறார் மீரா ஜாஸ்மின்.

மலையாளப் படவுலகில் சர்ச்சைக்குரிய இயக்குநர் லோகிததாஸ். அவருடைய படங்களில் தவறாமல் தொடர்ந்து நடித்து வந்தவர் மீரா ஜாஸ்மின். இதையடுத்து இருவரையும் இணைந்து ஏகப்பட்ட செய்திகள் வெளியாகின.

இருவரும் காதலிப்பதாகவும், சேர்ந்து வசிப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இவற்றை இருவருமே பொருட்படுத்தவில்லை. இடையில் லோகிததாஸுக்கு மலையாளத்தில் சில பிரச்சினைகள் ஏற்படவே அவருக்காக தமிழில் கஸ்தூரி மான் படத்தைத் தயாரித்தார் மீரா ஜாஸ்மின்.

இந்தப் படம் லோகிததாஸுக்கு தமிழில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் பிரிந்தனர். லோகிததாஸின் படங்களில் நடிக்க மாட்டேன் என மீரா அறிவித்தார். சொன்னபடி அவரும் நடிக்கவில்லை.

இதையடுத்து மீரா ஜாஸ்மின் தமிழிலும், மலையாளத்திலும் படு பிசியாக நடித்து வந்தார். கூடவே ஏகப்பட்ட வதந்திகளும் கூடி கும்மியடித்தபடி இருந்தன.

இந்த நிலையில், லோகிததாஸின் புதிய படத்தில் மீரா ஜாஸ்மின் நடிக்கவுள்ளாராம். இதை தாஸே தனது வாயால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் மலையாளத்தில் இயக்கி நெய்வேத்தியம் படத்தை தமிழில் கொண்டு வரவுள்ளேன். இந்தப் படத்தில் குடும்பப் பாசம் குறித்து விளக்கியுள்ளேன்.

இதையடுத்து மீரா ஜாஸ்மினை வைத்து செம்பட் என்ற படத்தை இயக்கப் போகிறேன். எனக்கும், மீராவுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. எப்போதும் போலவே நட்பு தொடருகிறது.

செம்பட் படம், சிலப்பதிகாரத்தின் மூலக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். அதை இந்தக் காலத்திற்கேற்ப வடிவமைத்துள்ளோம்.

இந்தப் படங்களை முடித்து விட்டு கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்கும் எண்ணத்தில் உள்ளேன். இதுவும் பேசப்படக் கூடிய படமாக அமையும் என்றார் தாஸ்.

அப்ப மாண்டலின்??

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil