»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த மணிரத்னத்துக்கு மனசாட்சியே இல்லப்பா!

தமிழகத்தின் கனவுக்கன்னியாக திகழந்து வந்த சிம்ரனை கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இரண்டுகுழந்தைகளுக்குத் தாயாக நடிக்க வைத்தார். அதைக்கூட சிம்ரனின் ரசிகர்கள் மன்னித்திருப்பார்கள். சோகக்காட்சிகளில் கூட தொப்புள் தெரிய நடித்து வந்த சிம்ரனை, அந்தப் படம் முழுக்க சேலையில் உலாவ விட்டார்.

அதன் பிறகு ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு ஆடிய ஆட்டம் மூலம் தனது ரசிகர்களின் மனக்குறையைப் போக்கினார்சிம்ரன்.

இப்போது, மணிரத்னம் தனது அடுத்த படைப்பான ஆயுத எழுத்து படத்தில் மீரா ஜாஸ்மினை ஒரு குழந்தைக்குத்தாயாக நடிக்க வைக்கிறார். படத்தில் மாதவனுக்கு ஜோடியாக இவர் வருகிறார். பட ஆரம்பத்தில் இருந்தேஇருவரும் கணவன்-மனைவியாக வருகிறார்களாம்.

மீண்டும் நந்திதாதாஸ்

நந்திதாதாஸ் சினிமா உலகில் ஒரு வித்தியாசமான கதாநாயகி. கதாநாயகனுடன் மரத்தைச் சுற்றி, டூயட் பாடி ஆடும்சராசரி வேடங்களை அவர் ஏற்பதில்லை. ஒவ்வொரு படத்திலும் வெரைட்டியான வேடம் எனக்கு வேண்டும் என்றுபிடிவாதமாய் இருப்பவர்.

அதனால்தான் அழகி படத்தின் தனலட்சுமி கேரக்டர் மூலம் ரசிகர்களின் மனதில் ஒரு இடம் பிடித்தார். மீண்டும்அத்தகைய ஒரு வேடம் தமிழில் அவருக்கு இயக்குநர் வசந்த் மூலம் கிடைத்துள்ளது. எழுத்தாளர்அசோகமித்திரனின் தண்ணீர் நாவலை படமாக்கும் முயற்சியில் வசந்த் உள்ளார்.

அந்தப் படத்தில் நந்திதாதாஸை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil