»   »  'புதிய பஞ்சாயத்தில்' மீரா

'புதிய பஞ்சாயத்தில்' மீரா

Subscribe to Oneindia Tamil


மலையாளப் படப்பிடிப்பிலிருந்து பாதியில் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியதால் கடுப்பான இயக்குநர் பிளஸ்ஸி, மலையாள தயாரிப்பாளர் கவுன்சிலில் மீரா ஜாஸ்மின் மீது புகார் கொடுத்துள்ளார்.


சர்ச்சை நாயகி மீரா ஜாஸ்மின். அவரைப் பற்றி எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சை அல்லது வதந்தி வந்து கொண்டேதான் இருக்கிறது. அவருடைய நடிப்புத் திறமையைப் பற்றி வரும் செய்திகளை விட வதந்திகளும், சர்ச்சைகளும்தான் சகட்டுமேனிக்கு வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் மீரா ஜாஸ்மின் பொறுப்பற்ற தனமாக நடந்து கொண்டதால் ஒரு மலையாளப் படம் ஓணத்திற்கு வராமல் தள்ளிப் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதாம்.

கொல்கத்தா நியூஸ் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மீரா. திலீப்தான் நாயகன். பிளஸ்ஸிதான் நாயகன் (தமிழில் விக்ரம், ஆசின் நடித்த மஜாவை இயக்கியவர் இவர்).

மீரா ஜாஸ்மின் செய்த தாமதம், பொறுப்பற்றதனமாக நடந்து கொண்டது உள்ளிட்ட காரணங்களால், ஓணத்திற்கு வந்திருக்க வேண்டிய கொல்கத்தா நியூஸ் இன்னும் வர முடியாமல் தவித்துக் கொண்டுள்ளதாம். இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டமாம்.

பிளஸ்ஸிதான், மீராவை, லோகிததாஸுக்கு அறிமுகப்படுத்தியவர் என்பது இங்கு முக்கியமாக சொல்லப்பட வேண்டியது. அதன் பிறகு மீரா போன உயரம் உலகறிந்தது.

கொல்கத்தா நியூஸ் படத்தின் கதையைக் கேட்டதும் தானாகவே முன்வந்து நடிக்க ஒப்புக் கொண்டாராம் மீரா. பிளஸ்ஸியின் வழக்கம் என்னவென்றால் படத்தின் ஷூட்டிங் போவதற்கு முன்பு, படத்தின் கலைஞர்கள் அனைவரையும் உட்கார வைத்து முழுக் கதையையும் விவரிப்பாராம். காட்சிகளையும் விளக்குவாராம். ரிகர்சலும் நடக்குமாம்.

இதன் மூலம் அனைவரும் ஒன்றிப் போய் நடிக்கும் வாய்ப்பு உருவாகும் என்பதால் இந்த ஐடியா. பிளஸ்ஸியின் இந்த நடிப்பு முகாமுக்கு எந்தக் கேள்வியும் கேட்காமல், ஆட்சேபனையும் சொல்லாமல் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் கூட வந்துள்ளனராம்.

ஆனால் இதுபோன்றெல்லாம் என்னால் வர முடியாது என்று கூறி விட்டாராம் மீரா. கேமரா ஓடினால்தான் எனக்கு நடிக்க முடியும். இப்படிச் சொல்லிக் கொடுத்தால் எல்லாம் நடிப்பு வராது என்று கூறி விட்டாராம்.

மேலும் திட்டமிட்ட நேரத்திற்கு ஷூட்டிங்குக்கு வராமல் 2 வாரங்கள் கழித்தே போனாராம். இதனால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியாமல் குண்டக்க மண்டக்க குழப்பமாகி ஓணத்திற்குப் படத்தைக் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாம்.

சரி போனது போகட்டும், மிச்ச சொச்ச காட்சிகளையாவது பிரச்சினையின்றி எடுத்து முடிக்கலாம் என்று நினைத்தாலும் அதிலும் மண்ணைப் போட்டு விட்டாராம் மீரா.

கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சில காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டிருந்தார் பிளஸ்ஸி. நேற்று ஷூட்டிங் நடப்பதாக இருந்தது. படப்பிடிப்புக்கு வந்த மீரா திடீரென நடிக்க மூடு இல்லை என்று கூறி கேரவன் வேனுக்குள் புகுந்து கொண்டாராம். என்ன ஏது என்று விசாரித்தபோது, நடிக்கும் மன நிலையில் நான் இப்போது இல்லை என்று கூறியுள்ளார்.

பிறகு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பிப் போய் விட்டாராம்.

இதனால் ஹீரோ திலீப் பயங்கர கடுப்பாகி விட்டார். மீராவின் தொல்லை ஜாஸ்தியாகி விட்டது. இதை இப்படியே விடக் கூடாது, ஏதாவது செய்யுங்கள் என்று இயக்குநரிடம் போய் முறையிட்டுள்ளார். அவருக்கும் அதே மன நிலைதான். இதனால், மலையாளத் திரைப்பட கவுன்சிலில் மீரா மீது புகார் கொடுத்துள்ளார் பிளஸ்ஸி.

அத்தோடு மலையாளப் பட இயக்குநர்கள் சங்கமும் மீராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க களம் இறங்கப் போகிறதாம்.

திலீப் படம் ஓணத்திற்கு வராமல் போனது இதுவே முதல் முறையாம். எல்லாம் மீராவின் புண்ணியத்தால்.

Read more about: blessy, meera, meerajasmine, producer
Please Wait while comments are loading...