»   »  பெரிய மனசு மீரா

பெரிய மனசு மீரா

Posted By:
Subscribe to Oneindia Tamil
மீராவுக்கு பெரிய மனசு என்றதும், மீரா வாசுதேவனை நினைத்துக் கொள்ளாதீர்கள். இது மீரா ஜாஸ்மின்.

மலையாளத்தில் மீரா ஜாஸ்மின் அளவுக்கு சர்ச்சைக்குரிய நடிகை யாருமில்லை. இயக்குனருடன் காதல், மூத்தநடிகர்களுடன் மோதல், கேரளாவில் நடிக்கத் தடை என எத்தனையோ பிரச்சினைகளைச் சந்தித்திருக்கிறார்.

ஆளை விட்டால் போதும் என்று தமிழுக்கு ஓடிவந்தார். முதல் படமான ரன் படம் செம ஹிட். ஆனால் அடுத்தவந்த படங்கள் எதுவும் ஓடவில்லை. ஆனாலும் நடிக்கத் தெரிந்த அழகான பெண் என்ற பெயர் வாங்கியுள்ளார்.

அண்மையில் வெளியான மணிரத்னத்தின் ஆய்த எழுத்து படத்தில் நன்றாகவே நடித்ததால் தென்னிந்தியஅளவில் அம்மணிக்கு கூடுதலாக கொஞ்சம் பாப்புலாரிட்டி கிடைத்துள்ளது. அதை வைத்து தெலுங்குப் பக்கம்போனார். அங்கு அவர் நடித்த படம் ஒன்றும் ஹிட்டாகி விட, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்திருக்கிறது.

தெலுங்கில் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று சொல்வதும் மூச்சு விடமாட்டேன் என்று சொல்வதும் ஒன்று என்பதால்மிகவும் தாராளம் காட்டி வருகிறார் இந்த பிழைக்கத் தெரிந்த சேச்சி.

தமிழ், மலையாளம், தெலுங்கு போக கன்னட சினிமா ஒன்று மட்டும் பாக்கியிருந்தது. இப்போது அங்குநுழையவும் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனீத் ராஜ்குமாருக்கு(பார்க்க நம்ம ஊர் செந்தில், வடிவேலுக்களைப் போல இருப்பார்) ஜோடியாக நடிக்க மீரா ஜாஸ்மின் புக்ஆகியுள்ளார்.

இதற்கிடையேதான் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. பாடமொன்னு விலாபம்என்ற மலையாளப் படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது. இந்தச் செய்தியை அறிந்ததும்சந்தோஷமாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த மீரா ஒரு நல்ல காரியத்துக்கான அறிவிப்பையும் வெளியிட்டார்.

தேசிய விருது மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும் பாலக்காட்டில் உள்ள ஒரு அநாதை ஆசிரமத்திற்குத் தரப்போகிறாராம். கிடைக்கும் பணத்தை எல்லாம் பேங்க் பாலன்ஸாக மாற்றும் நடிகைகளுக்கு மத்தியில்,அநாதைகளுக்கு உதவும் அக்கறை தனக்கு உள்ளது என்பதை மீரா ஜாஸ்மின் காட்டியிருக்கிறார்.

உண்மையில் அவருக்குப் பெரிய மனசுதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil