»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கிளாமர் விஷயத்தில் தாராளமயமாக்கல் கொள்கையை பின்பற்ற முடிவெடுத்து விட்டார் மீரா ஜாஸ்மின்.

நாக்கில் சனி என்பார்களே, அந்த பழமொழி மீரா ஜாஸ்மினுக்குத்தான் பொருந்தும். மலையாளப்படத்தில் அறிமுகமானபோது,இளவயது ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்றார். உடனே மம்மூட்டி மற்றும் மோகன்லால் ரசிகர்களிடம் இருந்து பலத்தஎதிர்ப்பு கிளம்பியது.

எங்க நடிகர்களைப் பார்த்தால் உனக்கு அவ்வளவு இளப்பமாகத் தெரிகிறதா என்று கொதித்தெழுந்து விட்டார்கள். அதன்பிறகுவேறொரு பேட்டி கொடுத்து அந்த விவகாரத்தை சமாளித்தார்.

இப்போது மம்மூட்டிக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மீராவின் பழைய பேட்டியை ஞபாகம் வைத்திருந்தஒரு நிருபர், மூத்த நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறினீர்களே என்று கேட்க, அதற்கு மீரா அளித்த பதில் பலத்தசர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.

இனி கிழவர்களுடனும் நடிப்பேன் என்று சொல்லிவிட்டார். இது உடனடியாக எல்லா மலையாளப் பத்திரிக்கைகளிலும்வெளியாகிவிட மீரா சங்கடத்தில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்.

மலையாளத்தில் அப்படியென்றால், தமிழுக்கு வந்த புதிதில் கவர்ச்சியா நானா என்று கேட்டு, இவரை நம்பி பணம் போட்டதயாரிப்பாளர்களைக் கதிகலங்க வைத்தார். ரன் படத்தைத் தவிர வேறெந்த படமும் ஹிட்டாகாததால் வாய்ப்புகள் குறைந்துபோனது.

தட்டுத் தடுமாறி வாய்ப்பு கிடைத்த ஜூட் படத்தில் கூட கவர்ச்சி காட்டமாட்டேன் என்று ஆரம்பத்தில் கூறியிருக்கிறார்.படத்திலிருந்து தூக்கி விடுவதாக தயாரிப்பாளர் கூறியவுடன்தான் ஓரளவுக்குக் கவர்ச்சி காட்ட ஒப்புக் கொண்டாராம்.

இதனையடுத்து மீராவின் பி.ஆர்.ஓக்கள் அவரிடம், கிளாமர் விஷயத்தில் இப்படியெல்லாம் அடம் பிடித்தால் திரையுலகில்காலத்தை ஓட்டுவது சிரமம். உங்களுக்கு சான்ஸ் கேட்டு நாங்கள் தயாரிப்பாளர்கள், டைரக்டர்களிடம் போனால் கவர்ச்சிவிஷயத்தில் நீங்கள் போடும் கட்டளைகளை சுட்டிக் காட்டுகிறார்கள். இதனால் இறங்கி வருவதே நல்லது என்றுகூறியிருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து மீரா தாராளமயமாக்கல் கொள்கைக்குத் தாவிவிட்டார்.

இப்போது மணிரத்னத்தின் ஆய்த எழுத்து படத்தில் மாதவனுடன் அம்மணி காட்டிய நெருக்கத்தைப் பார்த்த படப்பிடிப்புக்குழுவினர் அசந்து போய் நிற்கிறார்களாம். இனி வரும் படங்களில் இது மேலும் தூக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil