»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தேசிய விருது வாங்கி விட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார் நடிகை மீரா ஜாஸ்மின்.

கோபிகா, நவ்யா நாயர் என்று எத்தனையோ பேர் மலையாளத்தில் இருந்தாலும் மீரா ஜாஸ்மினுக்கு உள்ள மவுசுகுறையவில்லை. அடிக்கடி வாய்த்துடுக்காக ஏதாவது பேசி வம்பில் மாட்டிக் கொண்டாலும் தனது அழகு மற்றும்நடிப்பால் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வருகிறார்.

ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மீரா ஜாஸ்மின் அதற்கடுத்து தோல்விப் படங்களில் நடித்ததால்முன்னுக்கு வர முடியாமல் போய் விட்டது. இப்போது மணிரத்னத்தின் ஆய்த எழுத்து படம் மூலம் தமிழ் ரசிகர்கள்மனதில் கோட்டை கட்டி குடியிருந்து விடலாம் என்று நம்பிக்கையுடன் மாதவனுடன் படு நெருக்கமாகநடித்திருக்கிறார்.

இதற்கிடையே ஒரு தெலுங்கு பட வாய்ப்பும் வந்துள்ளது. இந் நிலையில் கலை இயக்குனர் சாபு சிரில் முதல்முறையாக ஒரு மலையாள படத்தை இயக்க முடிவு செய்து, அதில் கதாநாயகியாக நடிக்க மீராவை அணுகியுள்ளார்.

மீரா வழக்கமான வாய்த் துடுக்குப் பேச்சுடன், நான் இப்போது தெலுங்கு படங்களுக்கு ரூ.40 லட்சம் வாங்குகிறேன்.அந்தக் காசு தந்தால் மட்டுமே மலையாளத்தில் நடிப்பேன் என்று கூறியுள்ளார். 40 லட்சம் என்றதும் அதிர்ந்துபோன சாபு சிரில் பேசாமல் திரும்பி விட்டாராம்.

இத்தனைக்கு சாபு சிரிலும் மலையாளியே என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் மலையாளி நடிகையானமீராவைத் தேடிப் போனார்.

ரூ. 40 லட்சம் கேட்ட விஷயம் தெரிந்து மீராவுக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளனர்.தெலுங்கில் த்ரிஷா, நமீதா போன்று கவர்ச்சி காட்டினால்தான் தாக்கு பிடிக்க முடியும். கவர்ச்சி உனக்கு ஒத்து வராது.அதுவுமில்லாமல் சாபு சிரில் எடுக்கும் படத்தில் கதாநாயகிக்குத்தான் முக்கியவத்துவமாம். அதில் நடித்தால் தேசியவிருது

கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று எடுத்துக் கூறியுள்ளனர்.

இதையடுத்து மீராவே வலியப் போய் சாபு சிரிலிடம், நீங்கள் கொடுப்பது கொடுங்கள், நான் நடிக்கிறேன் என்றுகூறி விட்ட சான்லை வாங்கியிருக்கிறார்.

இப்போது போவோர் வருவோரிடம் எல்லாம், அனந்தபத்ரம் (அதான் படத்தின் பெயர்) படத்துக்கு நிச்சயம்தேசிய விருது வாங்குவேன். அதன் பிறகு என் ரேஞ்சே வேற என்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil