»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தயாரிக்க அவரது மகன் சரண் நடித்த உன்னைச் சரணடைந்தேன் படத்தில் அம்சமாகவே நடித்திருந்தார் மீரா வாசுதேவன்.


மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தவர் தமிழச்சியான இந்த மீரா, கடந்த வோர்ல்ட் கப் கிரிக்கெட் போட்டிகளின்போது ஒம் கிரிக்கெட்டாய நமஹ என்று சொல்லிக் கொண்டே ரங்கோலி கோலம் போட்டு நடித்த விளம்பரம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து சில இந்தி டிவி தொடர்களில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. மாடலிங்கின்போதே இவர் மீது கண் வைத்திருந்த பிரபல மாடல் மிலிந்த் சோமன், தானே தயாரித்து- ஹீரோவாக நடிக்கும் ரீல்ஸ் என்ற படத்தில் இவரை ஹீரோயினாக்கினார்.

அந்தப் படம் எடுக்கப்பட்டுக் கொண்டே இருந்ததால், பிற படங்களில் நடிக்க சான்ஸ் தேட ஆரம்பித்தார் மீரா. அப்போது இவரது ஆல்பங்கள் கோடம்பாக்கம் ஆட்களின் கண்ணில் பட, தனது சொந்தத் தயாரிப்பான உன்னைச் சரணடைந்தேன் மூலம் தமிழுக்கு இழுத்து வந்தார் எஸ்.பி.பி.

படத்தில் இவரது நடிப்பு நன்றாகவே பேசப்பட்டாலும், மும்பை வரவாக இருந்தாலும் தமிழச்சி என்பதாலேயே, கோலிவுட் இவரைக் கண்டுகொள்ளவில்லை. (அதே நேரம் கேரளத்து மீரா ஜாஸ்மீனை தூக்கி வைத்து ஆடுவதும் நம் கோலிவுட் தான்)

எப்படிாவது இளம் ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வரும் என நம்பிக்கையுடன் காத்து... காத்து.. காத்திருந்தார் மீரா வாசுதேவன். ஆனால், வெறும் காத்து தான் வந்தது. சான்ஸ் வரவில்லை.

இதனால் சொந்த ஊர் மும்பைக்கே போய்விட்ட மீரா, அங்கியிருந்தவண்ணமே தமிழில் சான்ஸ் தேடிக் கொண்டிருந்தார்.

இந்த அயராத முயற்சியால் அறிவுமணி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் ஹீரோ நிரந்தர காலேஜ் ஸ்டூடன்ட்டான முரளி. இளம் ஹீரோ இல்லையே என மீரா முதலில் தயங்கினாலும், வேறு வாய்ப்புகள் ஏதும் கண்ணில் படாததால் கிடைத்த இந்த சான்ஸை ஒப்புக் கொண்டுவிட்டாராம்.

அறிவுமணி படம் காமெடி கலந்த காதல் கதையாம். ஊட்டியில் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. லோ- பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் ஷப்னம், தாமிணி என இரு புதுமுகங்களும்ம் அறிமுகமாகின்றனர். படத்தை இயக்குவது கென்னடி.

இந்தப் படத்தையடுத்தாவது மீராவுக்கு வாய்ப்புக்கள் வருகிறதா பார்ப்போம்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil