»   »  நம்பிக்கையுடன் மீரா வாசுதேவன்

நம்பிக்கையுடன் மீரா வாசுதேவன்

Subscribe to Oneindia Tamil

"உன்னைச் சரணடைந்தேன் படத்திற்குப் பிறகு எங்கே உங்களை ஆளையே காணோம் என்று கேட்டால்,

"இந்திக்குப் போயிருந்தேன். அது தான் ஒரு சின்ன கேப். அன்புமணி படத்தில் நடித்தேனே.. நினைவில்லையா என்கிறார். மீராவாசுதேவன்.

படம் வந்த வேகத்திலேயே பெட்டிக்கு திரும்பிவிட்டால் எப்படி நினைவிருக்கும்...

"உன்னைச் சரணடைந்தேன்" படத்தில் நடித்த மீரா வாசுதேவனை சினிமா ரசிகர்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோகிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். ஏனென்றால் கடந்த முறை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிநடைபெற்றுக் கொண்டிருந்த போது ஒவ்வொரு ஓவருக்கும் இடையே ஒரு விளம்பரம் வந்தது.

அந்த விளம்பரத்தில் ஒரு பெண் "கிரிக்கெட்டாய நமஹ என்று கூறி வீட்டு வாசலில் கோலமிடுவார். கிரிக்கெட் ரசிகர்களிடையேபெரும் வரவேற்பைப் பெற்ற அந்த விளம்பரத்தில் நடித்தவர் தான் இந்த மீரா வாசுதேவன்.

பக்கா தமிழ் பிராமண குடும்பத்துப் பெண். பிறந்து வளர்ந்தது மும்பையில். வீட்டில் மாடலிங் வரை அனுமதித்தார்கள். ஆனால்,சினிமா என்று வந்தபோது கொஞ்சம் தயக்கத்துடன் தான் அனுமதித்திருக்கிறார்கள்.

இந்தி சீரியல்கள், சினிமாக்களில் தலைகாட்டிய மீராவுக்கு தமிழில் நிறைய நடிக்க ஆசை.

இவரது ஆசைக்கு, எஸ்பிபி தயாரித்த உன்னைச் சரணடைந்தேன் நல்ல பிரேக் கொடுத்தது. அதில் எஸ்பிபியின் மகன் சரணால்கேவலப்படுத்தப்படும் அவரது நண்பைனை மீட்டு, அவனையே திருமணம் செய்யும் கேரக்டர். இதில் மிக நன்றாகவேநடித்திருந்தார் மீரா வாசுதேவன்.

படம் சுமாராகப் போனாலும் மீரா பேசப்பட்டார். ஆனால் இந்தப் படத்திற்குப் பின்மீரா எங்கே போனார் என்று தேடவேண்டியநிலை ஏற்பட்டது.

இதன் பின்னர் புதுமுக இயக்குனர் கென்னடி இயக்கத்தில், முரளி நாயகனாக நடித்த "அறிவுமணி படத்தின் மூலம் மீண்டும்கோடம்பாக்கத்துக்கு வந்தார். இந்தப் படம் முடிவடைந்து முரளிக்கு மார்க்கெட் டல் என்பதால் ரிலீஸ் ஆவதில் சிக்கலானது.

ஒரு வழியாய் ரிலீஸ் ஆனாலும் வந்தவேகத்திலேயே தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டுவிட்டது. இதில் முரளியுடன் கிக்கொடுத்து நடித்திருந்தார் மீரா.

இந்தப் படத்தின் மூலம் தனது இளமையின் வேகத்தை தமிழ் சினிமா கண்டுகொள்ளும், அப்படியே வாய்ப்புக்களும் தொடர்ந்துவரும் என்று நினைத்திருந்த மீரா வாசுதேவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆனாலும் சளைக்காமல் தொடர்ந்து சான்ஸ் வேட்டையில் இறங்கியிருக்கிறார் மீரா.

தமிழ்ப் பெண் என்றால் தான் கோடம்பாக்கத்தில் கண்டுகொள்ள மாட்டார்களே. அந்த சிக்கல் மீராவையும் விடவில்லை.

இதனால் இந்திப் படங்களில் நடித்துக் கொண்டே தமிழிலும் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார். இதற்காக சமீபத்தில்சென்னையிலேயே குடியேறிவிட்டார்.

இந்தியில் நடிப்பதாய் சொல்கிறீர்கள்.. ஆனால், உங்கள் படம் ஏதும் வந்த மாதிரி தெரியவில்லையே என்று கேட்டால்,

பாலிவுட் கதை தான் உங்களுக்குத் தெரியுமே. ஒரு படத்தையே வருடக் கணக்கில் எடுப்பார்களே. அது தான் மேட்டர். வேறுஒன்றுமில்லை என்று பதில் வருகிறது.

அறிவுமணி படத்தில் எனக்கு கிளாமரான ரோல். அதில் நான் வேண்டிய அளவுக்கு திறமையை காட்டி உள்ளேன்.

நடிப்பு என்று வந்துவிட்டால் குடும்பப் பாங்கான வேடம், கவர்ச்சி வேடம் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.கதைக்கு ஏற்ற வேடமா என்று பார்த்துவிட்டு புகுந்து கலக்க வேண்டியது தான். தமிழில் நிச்சயமாய் ஒரு ரவுண்ட் வருவேன். அந்தநம்பிக்கை எனக்கு இருக்கிறது என்கிறார் மீரா.

நம்பினார் கெடுவதில்லை..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil