»   »  'தல' ஹீரோயின் மந்த்ராவின் செல்ல மகள் ரிதிமாவை பார்த்திருக்கிறீர்களா?

'தல' ஹீரோயின் மந்த்ராவின் செல்ல மகள் ரிதிமாவை பார்த்திருக்கிறீர்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை மந்த்ராவின் செல்ல மகள் ரிதிமாவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கு திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயின் ஆனவர் மந்த்ரா. அவர் அருண் விஜய் நடித்த ப்ரியம் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அவர் தமிழ், தெலுங்கு தவிர இந்தி, மலையாளம், கன்னடா ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் படங்களில் மந்த்ரா என்ற பெயரிலும், தெலுங்கு படங்களில் ராசி என்ற பெயரிலும் நடித்து வந்தார்.

அஜீத், விஜய்

அஜீத், விஜய்

அஜீத்துடன் ரெட்டை ஜடை வயசு, விஜய் நடித்த லவ் டுடே உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் மந்த்ரா. மார்க்கெட் அடியானதும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வந்தார்.

திருமணம்

திருமணம்

மந்த்ரா தெலுங்கு பட இயக்குனர் ஸ்ரீனிவாஸ் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் அவர் ஸ்ரீனிவாஸை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டில் ஆனார்.

குழந்தை

குழந்தை

திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த மந்த்ரா ஒன்பதுல குரு மற்றும் வாலு ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் கர்ப்பமான அவர் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

ரிதிமா

ரிதிமா

மந்த்ராவின் குழந்தைக்கு ரிதிமா என்று பெயர் வைத்துள்ளனர். மந்த்ரா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பிரசவத்திற்கு பிறகு நடிக்காமல் இருக்கும் அவர் விரைவில் மீண்டும் படங்களில் நடிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Stills of actress Mantra's daughter Rithima has been released. Mantra is expected to return to movies very soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil