»   »  ஜில் மேகம் மேகா நாயர்!

ஜில் மேகம் மேகா நாயர்!

Subscribe to Oneindia Tamil

அதி ரூப சுந்தரியாக ஆதி என்ற தெலுங்குப் படத்தில் அட்டகாசமாக திறமை காட்டியுள்ளார் கேரளத்து மேகா நாயர்.

மஞ்சள் கிழங்குக்கு கை, கால், முகம் முளைத்தால் எப்படி இருக்கும். அதை விட அதி அழகாக இருக்கிறார் இந்த கேரளத்து கிளாமர் நாயர்.

முகம் முதல் பாதம் வரை படு பாந்தமாக காணப்படும் மேகா நாயர், கொந்தளிக்கும் இளமையுடன், இனிய தீப்பந்தமாக தித்திப்பாக திறமை காட்டியுள்ளார்.

தெலுங்குப் படமாச்சே! கிளாமரை உருவாமல் விட்டு விடுவார்களா? ஜில்லென்ற இளமைத் துள்ளலுடன், மேகாவை உலவ விட்டுள்ளனர். ஹீரோ ஆதிநாத்தும், அவரும் இணைந்து, பின்னியுள்ள காதல் காட்சிகளில் இளமை கொப்புளிக்கிறதாம்.

தெலுங்கில் திறமை காட்டி வந்தாலும் தமிழ்தான் மேகாவுக்கு இலக்காம். தெலுங்கில் முத்திரை பதித்து விட்டு அப்படியே தமிழுக்கும் தாவி தமிழ் ரசிகர்களின் தாகத்தையும் தணிக்க தவிப்புடன் காத்திருக்கிறாராம்.

முத்தக் காட்சியாக இருந்தாலும், முழு உடல் காட்டும் கிளாமர் காட்சிகளானாலும் பின்னி எடுக்க புறப்பட்டிருக்கும் மேகா நாயர், ஆதி படத்தில் கொடுத்திருக்கும் போஸ்களைப் பார்த்தாலே புல்லரிக்க வைக்கும், அவரது புளகாங்கிதம் கொடுக்கும் கிளாமர் திறமை!

அட்டகாச உயரம், அளவெடுத்த அழகு முகம், கும்மென விம்மி நிற்கும் கிளாமர் பொலிவு என அழகாக பயமுறுத்துகிறார் மேகா. மிடியிலும், ஜீன்ஸ் பேன்ட்டிலும் மிளிரும் மேகா, தோற்றத்திலும், வன்மையான கிளாமரிலும் சுண்டி இழுக்கிறார்.

கேரளத்து கிளி என்பதை ஒவ்வொரு சீனிலும் ஆணித்தரமாக நிரூபிக்கும் வகையில் ஆதிநாத்துடன் அட்டகாசமாக குழைந்து நடித்திருக்கும் மேகா, தமிழில் தீவிரமாய் வாய்ப்புத் தேடி கொண்டிருக்கிறார்.

மேகா நாயரின் கிளாமர் சுனாமியில் சிக்கி ரசிகர்கள் ரகளையாகப் போவதில் சந்தேகமே இல்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil