»   »  கவர்ச்சி ஓகே, ஓகே-மேகா நாயர்

கவர்ச்சி ஓகே, ஓகே-மேகா நாயர்

Subscribe to Oneindia Tamil
Click here for more images

ரஞ்சித் ஹீரோவாக நடித்த பசுபதி மே/பா ராசாக்காபாளையம் படத்தில் நடித்த 2 நாயகிகளில் ஒருவராக நடித்த மேகா நாயருக்கு கவர்ச்சியான ரோல்கள் என்றால் டபுள் ஓ.கேவாம்.

கோலிவுட்டுக்கு கேரளாவில் இருந்து இறக்குமதியான நடிகைகளின் வரிசையைச் சேர்ந்தவர் மேகா நாயர். கேரளாவின் தொடுபுழா தான் இவருக்கு சொந்த ஊர். இவர் இந்தியாவில் சுற்றாத ஊர்கள் கிடையாதாம்.

காரணம், அப்பாவாம். இவரது தந்தை கடற்படையில் ஆபிசராம். இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் வசித்துள்ளார்களாம். மேகாவும் நேவி ஸ்கூலில் தான் படித்ததாராம். தமிழ், ஆங்கிலம், இந்தி என எல்லா மொழிகளிலும் பின்னி எடுக்கிறார்.

மேகா சினிமாவில் அறிமுகமானது ராம்தாஸ் இயக்கத்தில் வில்லன் நடிகர் ரியாஸ் கான் ஹீரோவாக அறிமுகமான ஹாய் என்ற படத்தின் மூலம் தான். அப்போது மேகாவுக்கு 14 தானாம், பள்ளி மாணவியாக இருந்த இவரை நடிக்க பச்சை கொடி காட்டியது அம்மா தானாம்.

பள்ளிப் படிப்பை முடித்த பின் சென்னையில் மாடலிங் செய்ததில், அவருடைய போட்டோவை பார்த்து தான் பசுபதி மே/பா ராசாக்காபாளையம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். இந்த படத்தில் இவர் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னை எவ்வளவு கவர்ச்சியாக நடிக்க சொன்னாலும் நான் நடிக்க ரெடி. கேரக்டருக்கு என்ன தேவையோ அதை கண்டிப்பாக நான் செய்வேன். ஆனால், எக்காரணம் கொண்டும், ஆபாசமாக, வல்கராக நடிக்க மாட்டேன். ஆபாசத்துக்கு நான் அடி பணிய மாட்டேன் என்று சூளூரைக்காத குறையாக கொக்கரிக்கிறார் மேகா நாயர்.

கவர்ச்சின்னா என்னா.. ஆபாசம் என்றால் என்ன மேடம்...

Read more about: meghanair

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil