கணவரை இழந்த நடிகையை மணக்கிறேனா?... பிக் பாஸ் வின்னர் விளக்கம்!

சென்னை : பிக்பாஸ் கன்னடம் சீசன் 4 டைட்டில் வின்னர் ப்ரீத்தம் என்பவரை மேக்னாராஜ் இரண்டாவதாக திருமணம் செய்யப்போவதாக செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ப்ரீத்தம் கூறியுள்ளார்.

மேக்னா ராஜ் 2018ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி சர்ஜா2020ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

சீரஞ்சீவி சர்ஜா இறந்த போது மேக்னா 6மாதம் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

சிரஞ்சீவி சர்ஜா

சிரஞ்சீவி சர்ஜா

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர், கன்னடத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ந் தே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கர்ப்பமாக இருந்தார்

கர்ப்பமாக இருந்தார்

சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்லவந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார். சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னாராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சீரஞ்சீவி சர்ஜா, இறந்த போது மேக்னா 6 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. சிருவே மீண்டும் பிறந்து வந்துவிட்டதாக குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

விளம்பர படங்களில்

விளம்பர படங்களில்

கணவன் மறைந்த துயரத்தில் இருந்த மேக்னாராஜ், அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். பல சோகங்களை மனதிற்குள் மறைத்துக் கொண்டு அதே புன்னகையுடன் திரையில் தோன்றி ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தார்.

சட்டப்படி நடவடிக்கை

சட்டப்படி நடவடிக்கை

இந்த நிலையில் திடீரென ஒரு சில யூடியூப் சேனல்களில் பிக்பாஸ் கன்னடம் சீசன் 4 டைட்டில் வின்னர் ப்ரீத்தம் என்பவரை மேக்னாராஜ் திருமணம் செய்யப்போவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்து அதிருப்தி அடைந்த ப்ரீத்தம், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

பிற சேனல்களுக்கு பாடமாக

பிற சேனல்களுக்கு பாடமாக

வீடியோ குறித்து பிரத்தம் ட்விட்டரில் கன்னடத்தில் கூறியிருப்பதாவது, இதை கண்டுகொள்ள வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் இதற்கு 2.70 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது. வியூஸ் மற்றும் பணத்திற்காக சேனல்கள் இறங்கும்போது சட்டப்படி எதிர்கொள்வது தான் ஒரே வழி. சட்டப்படி அந்த வீடியோக்களை நீக்கும்போது அது பிற சேனல்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றார். பிக்பாஸ் கன்னடம் சீசன் 4 டைட்டில் வின்னர் ப்ரீத்தம் அவர்கள், சிரஞ்சீவி சர்ஜா மற்றும் மேக்னாராஜ் குடும்பத்தினரின் மிக நெருங்கிய நண்பர் என்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X