புனித்தும் சிருவும் நமக்கு கற்றுக் கொடுத்தது இதுதான்... கணவரை பறிகொடுத்த நடிகை உருக்கம்!

பெங்களூரு: கன்னட நடிகர்கள் சிரஞ்சீவி சர்ஜா மற்றும் புனித் ராஜ்குமார் ஆகியோரின் மரணம் குறித்த நடிகை மேக்னா ராஜ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய சிரஞ்சீவி சர்ஜா, முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்.

சினிமா குடும்பத்தை சேர்ந்த சிரஞ்சீவி சர்ஜா நடிகர் அர்ஜூனின் அக்கா மகன் ஆவார். பத்தாண்டு காதலுக்கு பிறகு நடிகை மேக்னா ராஜை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்தார் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா.

சிரஞ்சீவி சர்ஜா மரணம்

சிரஞ்சீவி சர்ஜா மரணம்

மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மரணமடைந்தார். 39 வயதில் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 வெள்ளிக்கிழமை மரணம்

வெள்ளிக்கிழமை மரணம்

இந்நிலையில் அவரை போலவே கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான புனித் ராஜ்குமார் தனது 46வது வயதில் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட புனித் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Recommended Video

PUNEETH RAJKUMAR-க்கு இறுதி அஞ்சலி செலுத்திய மக்கள்| #RIPPuneeth
நேற்று உடல் நல்லடக்கம்

நேற்று உடல் நல்லடக்கம்

அங்கு அவருக்கு தீவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நடிகர் புனித் ராஜ்குமார். நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வந்த புனித் ராஜ்குமாரின் மரணம் ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நேற்று அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஃபேன் மேடு போட்டோ

ஃபேன் மேடு போட்டோ

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவியான நடிகை மேக்னா ராஜ் இருவர் குறித்தும் உருக்கமான பதிவை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதாவது புனித் ராஜ்குமாரும் சிரஞ்சீவி சர்ஜாவும் ஒன்றாக இருக்கும் ஃபேன் மேடு போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்னார் மேக்னா ராஜ்.

கற்றுக்கொடுத்தது இதுதான்

கற்றுக்கொடுத்தது இதுதான்

மேலும் அந்த போட்டோவுக்கு கன்னட சினிமாவின் இரண்டு ஜெம்கள்... என்றும் புனித் ராஜ் குமாரும் சிரஞ்சீவி சர்ஜாவும் நிகழ் காலம் எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள் என குறிப்பிட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X