»   »  அதர்வாவுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி!

அதர்வாவுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மேகா ஆகாஷ் நடிப்பில் ஒரே ஒரு தெலுங்குப் படம் மட்டுமே இதுவரை வெளியாகி இருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும்பாலானோரின் மனதையும் கவர்ந்துவிட்டார்.

காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக 'ஒரு பக்க கதை', தனுஷ் ஜோடியாக 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் மேகா ஆகாஷ். 'ஒரு பக்க கதை', 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய இரண்டு படங்களுமே முடிடைந்த நிலையில் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது.

Mekha akash committed in new tamil film

அதனால் தனக்கு ராசியில்லாத நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருந்தார் மேகா. அவரது அச்சத்தைப் போக்கும் வகையில் தற்போது அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் படவாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், 'இவன் தந்திரன்' படத்தைத் தொடர்ந்து அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் கண்ணன். இந்தப் படத்தின் கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Mekha akash committed in new tamil film

இந்தப் படமாவது குறிப்பிட்டதேதியில் வெளியாக வேண்டும் என எதிர்பார்ப்பில் இருக்கிறாராம் மேகா. இந்தப் படத்தில் மேகா ஆகாஷ் விஸ்காம் மாணவியாக நடிக்கிறாராம். அவர் இந்தக் கதாபாத்திரத்திற்கு செம பொருத்தமாக இருப்பார் என்பதாலேயே அவரை கமிட் செய்ததாகக் கூறியுள்ளார் இயக்குநர் கண்ணன்.

English summary
Megha Akash's only one Telugu movie has been released yet, But she has attracted the hearts of tamil cinema fans. Megha Akash has acted in tamil films 'Oru pakka kadhai' and 'Enai nokki paayum thotta'. In this case, director Kannan will be directing a film with Atharva following 'Ivan Thanthiran'. Megha Akash has been signed as the heroine of this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil