»   »  நாங்களும் சம்பாதிக்கிறோம்ல, ஆண்கள் வீட்டு வேலை செய்யட்டும்: காஜல் அகர்வால்

நாங்களும் சம்பாதிக்கிறோம்ல, ஆண்கள் வீட்டு வேலை செய்யட்டும்: காஜல் அகர்வால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்களும் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்த காலத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்கிறார்கள். அலுவலகத்திற்கும் சென்று வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தும் வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து நடிகை காஜல் அகர்வால் கூறுகையில்,

வீட்டு நிர்வாகம்

வீட்டு நிர்வாகம்

பெண்கள் தான் வீட்டு நிர்வாகத்தை பார்க்க வேண்டும் என்று இல்லை. ஆண்களும் வீட்டு நிர்வாகத்தை பார்க்கலாம். பெண்கள் சம்பாதிக்கவும் வேண்டும் அதே சமயம் வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும் என்பது நியாயமே இல்லை.

வீட்டு வேலை

வீட்டு வேலை

பெண்களும் சம்பாதிப்பதால் ஆண்களும் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். வீட்டு வேலைகளை பெண்கள் தான் செய்ய வேண்டும் என்று கூறும் ஆண்களை எனக்கு பிடிக்காது.

ஆசை

ஆசை

நான் ஒரு நடிகையாக இருந்தாலும் நானும் ஒரு சாதாரண பெண் தான். எனக்கும் பிற பெண்களை போன்று பல ஆசைகள் உள்ளன.

இளவரசர் வேண்டாம்

இளவரசர் வேண்டாம்

என்னுடைய காதலர் இளவரசராக இருக்க வேண்டும் என்பது இல்லை. சாதாரண மனிதராக இருந்தால் போதும் என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Kajal Agarwal said that since women are also earning, men should do household chores.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil