மிராய் ஹீரோவுக்கே அம்மா.. இலங்கையில் பீச் உடையில் குடும்பத்துடன் என்ன ஆட்டம் போடுறாரு பாருங்க ஸ்ரேயா!

சென்னை: ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணுக்கே அம்மாவாக நடித்து அசத்திய நடிகை ஸ்ரேயா இந்த வாரம் வெளியாகவுள்ள மிராய் படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கும் அம்மாவாக நடித்துள்ளார். மிராய் படத்தின் ரிலீஸை கொண்டாடுவதற்கு முன்னதாக தனது குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஸ்ரேயா அங்கே பீச் உடையில் குடும்பத்துடன் கடலில் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரேயா சமீப காலமாக அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். பெரிய பட்ஜெட் படங்களில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றே முடிவு செய்துவிட்டாரா ஸ்ரேயா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

Mirai Teja Sajja Mom actor Shriya Saran enjoys holiday at Srilanka with her family
Photo Credit:

ஸ்ரேயாவுடன் சினிமா பயணத்தை தொடங்கிய பல ஹீரோயின்கள் இன்னமும் லீடு ரோலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்ரேயாவுக்கு சினிமாவில் மார்க்கெட் மொத்தமாக அடிவாங்கிய நிலையில், அம்மா ரோல், அக்கா ரோல் என எது கொடுத்தாலும் ஓகே தான் என பூமிகா போல இவரும் இறங்கி வந்துவிட்டார் என்றே கூறுகின்றனர்.

அம்மா ரோலில் நடிக்கும் ஸ்ரேயா: இந்த வாரம் வெளியாக்வுள்ள தேஜா சஜ்ஜாவின் மிராய் படத்தில் ஸ்ரேயா தான் ஹீரோ தேஜா சஜ்ஜாவின் அம்மா என சொல்லப்படுகிறது. படத்தில் அம்மா சென்டிமென்ட் ரொம்பவே முக்கியமானதாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர். அம்மா ரோல்களில் நடித்து வந்தாலும் விருது விழா நிகழ்ச்சிகளிலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அதற்கு நேர்மாறாக கவர்ச்சி புயலாகவே காட்சி தந்து கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரேயா.

இலங்கையில் குடும்பத்துடன் டூர்: அடிக்கடி குடும்பத்துடன் வெளிநாடுகளில் சுற்றுலா சென்று வரும் நடிகை ஸ்ரேயா ஒரு பீச் பிரியை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இலங்கைக்கு தற்போது சுற்றுலா சென்ற நடிகை ஸ்ரேயா அங்கே குடும்பத்துடன் பீச்சில் விளையாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

நீச்சல் உடையில் ஸ்ரேயா: மழை படத்தில் சொட்டச் சொட்ட நனைந்து கவர்ச்சி புயலாக ஜெயம் ரவியுடன் ஆட்டம் போட்ட ஸ்ரேயா சிவாஜி படத்தில் வாஜி வாஜி பாடலில் நீந்திக் கொண்டே வரும் காட்சிகள் எல்லாம் ஏகப்பட்ட இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளன. இந்நிலையில், பீச்சில் நீச்சல் உடையில் தனது மகள் மற்றும் கணவருடன் ஸ்ரேயா விளையாடும் காட்சிகள் ரசிகர்களை வசீகரித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X