பாரதிராஜா பட ஹீரோயின் போல பாவாடை தாவணியில் மனதை அள்ளும் மிர்ணாளினி!
சென்னை : விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து பட்டையை கிளப்பி இருந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மிர்ணாளினி ரவி.
டப்ஸ்மேஷ் செயலி மூலம் பிரபலமான இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்க இப்பொழுது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தெலுங்கிலும் படங்களில் ஒப்பந்தமாகி வரும் இவர் இப்பொழுது பாவாடை தாவணியில் கிராமத்து பெண் போல கொள்ளை கொள்ளும் அழகுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

ஏலியன் பெண்
படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை மிர்ணாளினி ரவி. விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து பட்டையை கிளப்பி இருந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியன் பெண்ணாக சிறப்பாக நடித்த இவருக்கு இப்போது கதாநாயகியாக வாய்ப்புகள் குவிகிறது.

கதாநாயகியாக
தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றி வந்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கும் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் மிர்ணாளினி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதர்வா
பாபி சிம்ஹாவின் மிரட்டலான நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா தேசிய விருதை பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் அதர்வா சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜோடியாக மிருணாளினி நடித்து தெலுங்கிலும் அறிமுகமானார்.
Recommended Video

கிராமத்து குயிலாக
நிஜத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் எனிமி படத்தில் எதிரிகளாக விஷாலும் ஆர்யாவும் நடித்திருக்க இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் துபாயில் நடந்து முடிந்துள்ளது இதில் கதாநாயகியாக மிர்ணாளினி நடித்துள்ளார். அதேசமயம் விக்ரமுடன் இணைந்து கோப்ரா படத்திலும் நடித்துள்ளார். அடுத்தடுத்து முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி கலக்கிக் கொண்டிருக்கும் மிருணாளினி ரவி இப்பொழுது கிராமத்து பெண் போல பாவாடை தாவணியில் பார்க்க பார்க்க திகட்டாத கிராமத்து குயிலாக மாறியுள்ள க்யூட் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











