»   »  மிஷாவுக்கு வந்த கோபம்

மிஷாவுக்கு வந்த கோபம்

Subscribe to Oneindia Tamil

இங்கு சகல விஷயங்களிலும் தாராளம் கடைபிடிக்கப்படும் என்று போர்டு மாட்டாத குறையாக மும்பை,பெங்களூர் வரவுகள் சான்ஸ் வேட்டையாடிக் கொண்டிருக்க, மிஷா என்ற நடிகை மட்டும் தனது கண்டிசன்களால்தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் திணறடித்துக் கொண்டிருக்கிறார்.

செவ்வேல் என்ற படத்தில் ஜெய் ஆகாசுக்கு ஜோடியாக நடித்துக் கொண்ருக்கிறார் மிஷா.

படத்தின் சூட்டிங் இலங்கையில் நுவரேலியா, கண்டி, கொழும்பு என பல இடங்களில் நடத்தப்பட்டு இப்போதுஜாரூராக சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. குஷால்தாஸ் கார்டனில் பாடல் காட்சி எடுக்கப்பட இருந்தது.

மிஷாவையும் வழக்கமான மும்பை வரவாக நினைத்துவிட்ட இயக்குனர் பிரிமூஸ், இந்தப் பாடல் காட்சிக்காகதொடைக்கும் மேல் அரையடி உயர்ந்த ஒரு மகா டேஞ்சரான குட்டை டாப்ஸை மட்டும் கொடுத்து, போட்டுகிட்டுவாம்மா என்று சொல்ல, அதைத் தூக்கி விசியடித்துவிட்டாராம் மிஷா.

இந்த டிரஸ்ஸைப் போடவே மாட்டேன், எனக்கு இந்த சினிமாவே வேண்டாம் என்று கிளம்பிய அவரை அவரதுதாயார் தான் சாமாதானப்படுத்தினாராம். தாயாரின் பேச்சையும் கேட்காமல் மிஷா கிளம்ப, இருவருக்கும் கடும்வாக்குவாதம் நடந்திருக்கிறது சூட்டிங் ஸ்பாட்டிலேயே.

இந்தியிலேயே மகளை திட்டோ திட்டு என்று திட்டி அந்த உடையை அணியச் சொன்னாராம். ஆனால், தாயாரைபொளந்து கட்டிய மிஷா அதைத் தூக்கி வீச, கடையில் இயக்குனர் தான் இறங்கி வந்தாரம்.

கொஞ்சம் இறக்கம் உள்ள டாப்ஸைக் கொடுத்து ஆடச் சொன்னாராம். அப்புறம் தான் கோபம் தணிந்தாராம் மிஷா.

மும்பை வரவுகள் என்றாலே தண்ணி, சிகரெட், இத்யாதி விஷயங்களில் ரொம்ப ப்ரி என்று கண்ணடித்தபடிதான்,அவர்களை புரோக்கர்கள் மூலம் பிடித்து வருகின்றனர் தமிழ் இயக்குனர்கள்.

ஊதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.. ஊத்தாமல் ஒரு நாளும் தூங்க வேண்டாம் என்று புதிய ஆத்தீ(!)ச்சூடிஎழுத வைக்கும் மும்பை வரவுகளுக்கு மத்தியில் மிஷாவை மிக அபூர்வமாகப் பார்க்கிறார்கள் கோடம்பாக்கம்குருவிகள்.

ஆனால், இந்தக் காரணத்தை வைத்தே அவரை புக் செய்யத் திட்டமிட்டிருந்த சில தயாரிப்புப் பார்ட்டிகளும்ஒதுங்கிக் கொண்டது தான் சோகமான டெவலப்மென்ட்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil