»   »  அதாச்சு 16 வருஷம்: ஃபீல் பண்ணும் நடிகை பிரியங்கா சோப்ரா

அதாச்சு 16 வருஷம்: ஃபீல் பண்ணும் நடிகை பிரியங்கா சோப்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: உலக அழகி பட்டம் வென்று 16 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்துள்ளார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.

2000ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு இளைய தளபதி விஜய்யின் தமிழன் படம் மூலம் நடிகையானார். பாலிவுட் சென்ற அவர் இன்று முன்னணி ஹீரோயின்.

Miss word title: Priyanka Chopra reminisces

பாலிவுட் தவிர ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஹாலிவுட் நெடுந்தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் முதல் இந்திய பெண் பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலக அழகிப் பட்டம் வென்று 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை பிரியங்கா ட்விட்டரில் நினைவு கூர்ந்துள்ளார். மேலும் தனக்கு பட்டம் அளிக்கப்பட்டபோது எடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

பிரியங்கா நடிப்பு தவிர பாடலும் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Priyanka Chopra is celebrating 16 years of being crowned as Miss World.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil